எல்லாமே மீம்ஸ் மாமே!

பாரதி தம்பி, கார்க்கிபவா, ஓவியம்: ஹாசிப்கான்

‘போடுங்கம்மா ஓட்டு... ரெட்டலையைப் பார்த்து’, ‘போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து’ என பள்ளிச் சிறுவர்கள் சகிதமாக, தெருத் தெருவாகச் சுற்றித்திரிந்த தேர்தல் அல்ல இது. தேர்தல் வருவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே ஊரில் உள்ள எல்லா சுவர்களிலும் ‘DMK Reserved’, ‘ADMK Reserved’ என எழுதிவைத்த தேர்தல் அல்ல இது. ஆட்டோக்களில் வளையவரும் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், ‘வாக்காளப் பெருங்குடி மக்களே...’ எனக் கரகரக் குரலில் மக்களை அழைக்கும் தேர்தல் அல்ல இது. ‘இதோ, நமது வேட்பாளர் வந்துகொண்டிருக்கிறார். உங்கள் வீட்டுப் பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்...’ என ஏழெட்டு வாகனங்கள் புடைசூழ வேட்பாளர்கள் கிராமத்து வீதிகளில் வளையவரும் தேர்தல் அல்ல இது.

இது வேற மாதிரி!

வதந்திகள் உலவும் வாட்ஸ்அப்பில், ‘உங்கள் சகோதரி பேசுகிறேன்...’ என்கிறார் ஜெயலலிதா. மிஸ்டு கால் கொடுத்தால், கருணாநிதியே  கதைக்கிறார். நகைக்கடைகளும் துணிக்கடைகளும் விளம்பரம்செய்யும் நாளிதழ் முதல் பக்கத்தில், `சிங்கம்’ பட பன்ச் வசனத்தை ரீமிக்ஸ் செய்து கலவரப்படுத்துகிறார்கள். விஜய்-அஜித் ரசிகர்கள் மல்லுக்கட்டும் ஹேஷ்டேக் ஏரியாவில் #jayafails என அதிரடியாக மிரட்டுகிறார்கள். ஆங்ரிபேர்ட்ஸும் சப்வே சர்ஃபரும் முந்தும் ஆப்ஸ் உலகில் அன்புமணி ஆப் `உள்ளேன் ஐயா’ என்கிறது. நிச்சயம் சொல்லலாம், இது தேர்தல் சீஸன் 2.0.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்