கமான் கபடி கேர்ள்ஸ்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

கபடி, கிராமத்து விளையாட்டுதான். ஆனால், ஒரு கிராமம் முழுக்க கபடி வீரர்களாக, அதுவும் மாநில அளவில், தேசிய அளவில் தடம் பதிக்கும் வீரர்களாக இருந்தால் ஆச்சர்யம் தானே! தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் எக்கச்சக்க கபடி வீரர்கள். ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா, இந்த ஊர்தான்.

‘‘2012-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பா விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி வெள்ளிக் கோப்பை ஜெயிச்சது. அதுல எங்கள் ஊர்ல இருந்து நானும் பிரகதீஸ்வரியும் விளையாடினோம். கேரளாவில் நடந்த தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு மூன்றாவது இடம். அதுல விளையாடிய நான், கௌசல்யா, ரதிபாரதி, பிரகதீஸ்வரி நாலு பேரும் தென்னமநாடு பெண்கள். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், தமிழ்நாடு அணி மூன்றாம் பரிசு வென்றது. அதுல கலந்துக்கிட்டவங்கள்ல பத்து பேர் எங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க. ஒவ்வொருத்தருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைச்சது. அடுத்து, ஈரானில் நடக்கவிருக்கிற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட நானும் பிரகதீஸ்வரியும் தேர்வாகியிருக்கோம்’’ என்று சொல்லும் பவித்ராவின் கண்களில் பெருமிதம் மின்னுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்