கலைடாஸ்கோப் - 30

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

 ``ஃப்ரம் பிளானெட் எர்த். இவன்தான் கடைசி மனிதன். கன்ஃபார்ம்'' என்றார் சோல்ஜர். அராகா கிரகத்தின் பிரசிடென்ட் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

``மயக்கநிலையில் இருக்கான். ஹார்ட் பீட் ஸ்லோவா இருக்கு'' என்றார் சர்ஜன்.

``இந்த சிப் மட்டும்தான் இவனிடம் இருந்தது. நமக்குப் பரிச்சயம் இல்லாத ஏதோ இதில் இருக்கிறது. பட், சம்திங் ரிலேட் டு சவுண்டு'' என்றார் ஒரு சோல்ஜர்.

``ஹார்ட் பீட் இன்னும் குறைந்துவிட்டது சார்'' என்றார் பின்னால் இருந்த சர்ஜன்.

மிதந்து வந்த கணினியில் அந்த சிப்பைப் பொருத்தினார் பிரசிடென்ட். இயந்திர சிணுங்கல்களின் முடிவில், மானிட்டர் ஒளிர்பச்சையில் எழுத்துக்களைக் காட்டியது.

`இந்த சிப்பில் இருப்பது இசை. பிளானெட் எர்த்துக்கே உரிய பிரத்யேக வடிவம்' என்றது கணினி.

``இசை... அப்படி என்றால்?'' - புருவம் நெளிய கணினியிடம் வினவினார் பிரசிடென்ட்.

`நமது பிளானெட்டில் இருப்பதுபோல ஒலிகள்தான். ஆனால், அதை பூமியில் மனிதன் விதவிதமாக கம்போஸ் செய்திருக்கிறான். அதுவே இசை.'

``எந்த மனிதன் உருவாக்கினான்?'' என்றான்.

`பலர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட சிப்பில் இருக்கும் இசை, ஒரே ஒரு மனிதன் உருவாக்கியது என அனலைஸில் தெரிகிறது’ என்றது கணினி.

``நான் கேட்க முடியுமா?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்