‘நீ வா ரெட்டு!’

கார்த்தி

காமிக்ஸ், வீடியோ கேம்களில் வரும் கதைகளுக்கு, திரைக்கதை எழுதி படமாக்குவது எல்லாம் ஹாலிவுட்டில் பழைய ஸ்டைல். தொழில்நுட்பங்கள் வளர்ந்த வேகத்தில், மொபைல்களில் வெளியாகும் கேம்களை எல்லாம் தற்போது திரைப்படமாக்கத் தொடங்கிவிட்டார்கள். டச் மொபைல் உபயோகிக்கும் பலரை ஒருகாலத்தில் ஆங்ரி பேர்ட்ஸ் நோய் ஆட்டிப்படைத்தது. `ஃப்யீங்’ எனச் சத்தத்துடன் பறந்து பன்றிகள் இருக்கும் கட்டடங்களை உடைக்கும் அந்தப் பறவைகள் விளையாட்டை, பித்துப்பிடித்ததுபோல் விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த `ஆங்ரி பேர்டு' இப்போது படமாகியிருக்கிறது.

பறக்க இயலாத பறவைகள் சூழ்ந்திருக்கும் தீவுதான் கதைக்களம். மற்ற பறவைகள் ஜாலியாக இருந்தாலும், சிவப்பு நிறப் பறவை மட்டும் `கோபப்படுங்கள்' எனக் கோப மோடிலேயே சுற்றுகிறது; மற்ற பறவைகளிடம் இருந்து விலகியே பயணம் செய்கிறது. இப்படிப்பட்ட நிலையில், அங்கு புதிதாக உள்ளே நுழைகிறார்கள் பச்சை நிறப் பன்றிகள். சிவப்பு நிறப் பறவை, பன்றிகளைப் பற்றி எடுத்துச் சொன்னதும், பன்றிகளுக்கு நட்புக்கரம் தருகின்றன பறவைகள். ஒருகட்டத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் பன்றிகள், பறவைகளின் முட்டைகளைத் திருடிச் சென்றுவிடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்