ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

படம்: அ.குரூஸ்தனம்

விகடன் வாசகர்களுக்கு, என் அன்பான வணக்கம்.

நான் எழுத்தாளர் ரவிக்குமார் பேசுகிறேன்.


தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கும் தலைவர்கள், தங்களை விற்பனைப்பொருளாக விளம்பரம் செய்துகொள்கிறார்கள். `இந்த அணுகுமுறை தமிழக அரசியலுக்குப் புதிது. இந்தத் தேர்தல் டெக்னிக் நிச்சயம் வெற்றிபெறும்' எனப் பலவிதங்களில் உதாரணங்களை முன்வைக்கிறார்கள். இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒரு தலைவர் தன்னை ஒரு விற்பனைப்பொருளாக முன்வைக்கும்போது, வாக்களிக்கும் மக்களை ஒரு நுகர்வோராகத்தான் பார்க்கிறாரே தவிர, குடிமக்களாகப் பார்ப்பது இல்லை. இதுபோன்ற மாற்றம் நம் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது இல்லை. இந்த அரசியல் விளம்பர மோகம் குறித்து, விரிவாக விளக்குகிறேன்.

நாம் மன்னராட்சி காலத்தைத் தாண்டி மக்களாட்சி காலத்துக்கு வந்து, சில நூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மன்னராட்சி மனநிலையில் இருந்து நாம் இன்னும் வெளியே வரவில்லை. தலைவருக்கு மலர் கிரீடத்தை அணிவிப்பதும், வீரவாள் அல்லது செங்கோல் தருவதும், மேடையில் பேசும்போது ‘அரியணை ஏறுவோம்’ எனச் சொல்வதும், விளம்பரங்களில் தங்களை ராஜாவாகவும் ராணியாகவும் சித்தரித்துக்கொள்வதும் மன்னர் காலத்து மனோபாவங்கள். இப்படி  தனிமனிதனைத் துதிபாடுவதால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் என்ன தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்