‘நிர்வாகத் திறமையற்றவரா சகாயம்?’

அரசின் அதிர்ச்சி அப்ரைசல்ஆ.விஜயானந்த்

டனில் தத்தளித்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வருமானத்தை, 200 கோடியில் இருந்து 300 கோடி ரூபாயாக உயர்த்தியது, `வேட்டி தினம்', `தாவணி தினம்' எனப் புதுப்புதுத் திட்டங்கள் கொண்டுவந்தது, 80 ஆண்டுகளாக இல்லாத வகையில் லாபத்தில் இருந்து நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கியது, புகழ்பெற்ற அஜந்தா, எல்லோரோ ஓவியங்களை சேலையில் பதித்தது... என அடுக்கடுக்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சாதனைகள் புரிந்த ஓர் அதிகாரிக்கு, இந்த அரசு கொடுத்திருக்கும் சான்றிதழ் என்ன தெரியுமா?

‘நிர்வாகத் திறமையற்றவர்’.

ஆம், அந்த அதிகாரி, சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது கிரானைட் விவகாரத்தைக் கிளறியதால், கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றப்பட்டார் சகாயம். அப்போது கோ-ஆப்டெக்ஸின் கடன் 11.5 கோடி ரூபாய். இவர் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 13.5 கோடி ரூபாய்க்கு உயர்த்தி லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டினார். அப்போது கோ-ஆப்டெக்ஸ் துறைக்கு அமைச்சராக இருந்த கோகுல இந்திராவுக்கும் சகாயத்துக்கும் ஆரம்பம் முதலே ஏழரை. கோ-ஆப்டெக்ஸ் அலுவலகத்தில் தனக்கு தனியாக ஓர் அறை ஒதுக்கச் சொல்லி கோகுல இந்திரா கேட்க, சகாயம் மறுத்தார். ‘கோ-ஆப்டெக்ஸின் 11 மண்டல மேலாளர்களுக்கும் கார் கொடுக்க வேண்டும்’ என அமைச்சர் தரப்பு  சொல்ல, ‘தீபாவளி சமயத்தில்தான் கார் தேவைப்படும். அப்போது மட்டும் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்’ என அதற்கும் நோ சொன்னார். `கோ-ஆப்டெக்ஸ் கடைகளை நவீனப்படுத்தும் வேலைகளுக்கான டெண்டரை, குறிப்பிட்ட ஒரு நபருக்குத்தான் தர வேண்டும்' என அமைச்சர் தரப்பில் இருந்து அழுத்தம் வர, ‘நீங்கள் குறிப்பிடும் நபர் தாராளமாக டெண்டரில் கலந்துகொள்ளட்டும். குறைவான தொகை குறிப்பிடுபவருக்கு மட்டுமே வேலையை ஒதுக்க முடியும்’ என, கறார் காட்டினார் சகாயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்