மைல்ஸ் டு கோ... 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படங்கள்: ஸ்டில் ராபர்ட்

`‘அழியாத கோலங்கள்’ பட எக்ஸ்டென்ஷனை டி.வி-க்குப் பண்ணணும்னா என்னவா பண்ணலாம்னு ஐடியா சொல்லுங்க’ - பாலு மகேந்திரா சார் இப்படிச் சொல்லியதும்,  ‘சார், ஜெயமோகனின் ‘கிளிக்காலம்’ குறுநாவல் நல்லா இருக்கும். அதையேகூட டி.வி-க்கு எடுத்துக்கலாம்’ என்றார் முத்துக்குமார். 50 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தக் குறுநாவலை அங்கேயே அமர்ந்து படித்தோம்; விவாதித்தோம். முந்தைய தலைமுறை காதல், சமூகத்தில் உறவுகள்... இப்படி அனைத்தையும் வைத்து எழுதப்பட்ட கதை.

பாலு மகேந்திரா சார், ஒரு புத்தகத்தைப் பற்றி இலக்கிய வாசகனாகப் பேசுவது வேறாகவும், அதையே திரைக்கதை ஆசிரிய னாக அணுகும்போது வேறாகவும் இருக்கும். ‘அதில் உள்ள இலக்கிய தன்மையை விட்டுடு. முதல்ல அதோட கதை என்னன்னு சொல்லு. முரண் என்னனு சொல்லு. சிறுகதையோ, நாவலோ அதைப் படமாக்குவதற்கு முன்னாடி இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்பார்.

அடுத்து, ‘ஒரு கதையை நாம ஸ்கிரீனுக்கு மாத்துறோம்னா, முதல் காட்சியிலேயே முரண் ஆரம்பிக்கணும். அப்படி முடியலைனா, முதல் பத்து நிமிடங்களுக்குள்ளயாவது ஆரம்பிக்கணும். அதுவும் முடியலையா, அந்தத் திரைக்கதையை நாம ஆரம்பிக்கவே கூடாது’ என்பார். மேலும், ‘அந்த முரணை முன்வைத்து திரைக்கதையைக் கட்டமைக்கும்போது நாவலின் பல முக்கியமான உன்னதமான தருணங்களை நாம் இழக்க நேரிடும். ஆனால் ஒரு திரைக்கதை ஆசிரியன் அறுவைசிகிச்சை செய்யும் ஒரு மருத்துவ நிபுணனைப்போல், துல்லியமாக அந்த விஷயங்களை மெள்ள எடுத்து வெளியே வைத்துவிட்டு திரைமொழிக்கு ஏற்றாற்போல் அந்தக் கதைக்கு மறுவடிவம்  கொடுக்கவேண்டும்’ என்பார். பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லை... எல்லா குருக்கள் சொல்லும் ஸ்கிரிப்ட் கைடுலைன் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்