காதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்

வேலை தேடும் ஹீரோயினுக்கும், எந்த வேலையும் தெரியாத ஹீரோவுக்கும் நடுவில் கிராஸ் ஆகும் காதலின் கதை.

ஜெயில் ரிட்டர்ன் விஜய் சேதுபதி, அரசியல்வாதி நண்பன் பார் லைசன்ஸ் வாங்கித் தருவான் எனக் காத்திருக்கிறார். அவரின் எதிர்வீட்டுக்குக் குடி வருகிறார் வேலை இழந்த ஐ.டி பெண் மடோனா செபாஸ்டியன். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சென்னைக்கு வந்த மடோனாவுக்கு, உடனடித் தேவை இன்னொரு வேலை. அவரின் வேலைத் தேடலுக்கு அணிலாக உதவுகிறார் விஜய் சேதுபதி. இந்த இரண்டு வி.ஐ.பி-களுக்கும் காதல் எப்படி வந்தது, அது என்ன ஆனது என்பதே `காதலும் கடந்துபோகும்'.

`இது அக்மார்க் கொரியா படம்ப்பா' என்ற கிரெடிட்டோடு ரீமேக்கியிருக்கிறார் `சூது கவ்வும்' நலன் குமரசாமி. அதே நக்கலும் நையாண்டியுமாக வசனங்களுக்கு அப்ளாஸ் மழை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்