கோடம்பாக்கத்தின் புது அம்மா!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: பா.காளிமுத்து

கோடம்பாக்கத்தின் புது அம்மா தீபா ராமானுஜம். `பிச்சைக்காரன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மா. டயட்டீஷியனான தீபா, நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர்... இப்போது சினிமா நடிகை.

“இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?”

“என் கணவர் ஐ.டி-யில வேலைபார்க்கிறார். அடிக்கடி டிரான்ஸ்ஃபர் வரும். என்கிட்ட ஆலோசனை கேட்டு வர்றவங்களுக்கு, ஒரு நல்ல டயட்டீஷியனா இருக்கணும். அடிக்கடி ஊர் மாறிக்கிட்டே இருந்ததால் வேலையை சரியா செய்ய முடியலை. அதனால ஃபீல்டையே மாத்திக்கிட்டு, 1995-ம் ஆண்டு தூர்தர்ஷன்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்புறம் பாலசந்தர் சார் இயக்கிய தொலைக்காட்சி தொடரான ‘பிரேமி’யில் செண்பகம் அத்தையா நடிச்சேன். அடுத்து நிறைய நாடகங்கள். இதற்கிடையில் கணவருக்கு மீண்டும் டிரான்ஸ்ஃபர். அமெரிக்கா போயிட்டோம். அங்கே `க்ரிய கிரியேஷன்’னு ஒரு கம்பெனி தொடங்கி, நிறைய மேடை நாடகங்கள் நடிச்சு, இயக்கிக்கிட்டு இருந்தேன். மேடை நாடகத்தையும் தாண்டி ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதான் இப்போ சினிமா என்ட்ரி.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்