"குரு மீதான அன்பு எல்லாத்தையும்விட பெருசு!”

ம.கா.செந்தில்குமார்

``ஒரு குருவோட பட‌த்துல நடிக்கிற வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைச்சிடாது. எனக்கு அமைஞ்சது வரம். இளையராஜா சாரோட 1,000-வது படத்தில் நானும் இருந்தது சாதாரண விஷயமா? பந்தயத்துல வெற்றியா தோல்வியானு நீங்க பார்க்கிறீங்க. பந்தயத்துல கலந்துக்கிட்டதே பாக்கியம்னு நான் பார்க்கிறேன். வெறும் வெற்றி - தோல்வி எப்படி என்னை வீழ்த்தும்?'' - ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் எகிறுகிறது சசிகுமாரின் வேகம்.

``அடுத்த படம் ஆரம்பித்ததே தெரியவில்லை. அதற்குள் இசை வெளியீடு எனப் பரபரப்பாகிவிட்டீர்களே?''

`` `வெற்றிவேல்' படத்தோட தயாரிப்பாளர் ரவீந்திரன், விநியோகஸ்தரா இருந்து இந்தப் படத்துல தயாரிப்பாளரா உயர்ந்திருக்கார். `பிரம்மன்' பண்ணியபோதே அட்வான்ஸ் கொடுத்தவர், `தாரை தப்பட்டை' முடியும் வரைக்கும் காத்திருந்தார். ஷூட்டிங்கில் எனக்கு கையில் அடிபட்டப்ப அட்வான்ஸ் கொடுத்ததை எல்லாம் மறந்துட்டு, `நீங்க குணமாகி வந்தா போதும். நாம பொறுமையா படம் பண்ணிக்கலாம்'னு சொன்னார். பணம் போட்டவங்களோட வலி என்னன்னு எனக்குத் தெரியும். அந்த வலியை மறந்து அவர் காட்டிய அன்பும் நம்பிக்கையும் என்னை உட்காரவிடலை. அதனாலதான் இவ்வளவு வேகம்.’’

‘‘அறிமுக இயக்குநரின் படம். என்ன களம்?’’

‘‘நாம எதைத் தேடி அலையுறமோ, அதை ஒருத்தர் கண்ணு முன்னாடி நீட்டினா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இயக்குநர் வசந்தமணி, எனக்காகவே அளவு எடுத்து செஞ்ச சட்டை மாதிரி கதை பண்ணியிருக்கார். காதல், குடும்பம், சுற்றி நடக்கும் சந்தோஷங்கள்னு வெற்றிவேல் என்பவனைப் பற்றிய கதை. தப்புப் பண்ணினவனை எப்பவும் மன்னிச்சுப் பழகுங்க, விட்டுக்கொடுங்கனு சொல்லியிருக்கோம். ‘சுந்தரபாண்டியன்’, ‘நாடோடிகள்’ பார்த்த மாதிரி விறுவிறுனு கலகலனு  ஃபேமிலி என்டர்டெயினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்