ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, பாடலாசிரியர் யுகபாரதியின் வணக்கம்...

ஓர் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையேயான அலைவரிசை மிக முக்கியம். மெட்டுக்குப் பாட்டு அல்லது பாட்டுக்கு மெட்டு... எப்படி இருந்தாலும், பாடல் வரிகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் மிகப் பெரிய பொறுப்பு இசையமைப்பாளருக்குத்தான். பாடலாசிரியர் என்பவர், இசையமைப்பாளரின் துணைப் பணியாளராகவே இருக்கிறார். இதை, இசையமைப்பாளர் வித்யாசாகருடன் பணியாற்றியபோதுதான் உணர்ந்தேன். அது என்ன படம், பாடல்... கூறுகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு திரைப்படப் பாடல், தன் வாழ்க்கையோடு கலந்திருக்கும். அப்படி என்னோடு கலந்த, எனக்கு மிகவும் பிடித்த, என்னை உற்சாகம் கொள்ளவைத்த, துவளும்போது ஊக்கம் கொடுத்த பல பாடல்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் `உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் இடம்பெற்ற `புஞ்சை உண்டு... நஞ்சை உண்டு...' என்ற பாடல். ஐயா புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய இந்தப் பாடலில், நான் புரிந்துகொண்ட விஷயங்களையும் என்னை கவனிக்கவைத்த கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

இன்றைய டிஜிட்டல் உலகில் கடிதம் எழுதுவது என்பது முற்றிலும் மறைந்து போய்விட்டது. மனித உணர்வு களைத் தாங்கிவரும் கடிதத்தைப் பிரித்து படிக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும், தற்போதைய அலைபேசி உடையாடலில் இல்லை. என்னை எந்த ஒரு விஷயம் பாதிக்கிறதோ அல்லது நெகிழவைக்கிறதோ, அது தொடர்பான நபருக்கு ஒரு கவிதையையோ அல்லது வார்த்தைகளால் தொடுத்த வாழ்த்துச் செய்தியையோ எழுதி கடிதமாக அனுப்புவது என் வழக்கம். அப்படி என்னை சமீபத்தில் கடிதம் எழுதவைத்த நபர் ரவிசுப்பிரமணியன். அவரின் `திருலோகம் என்றொரு கவி ஆளுமை' ஆவணப்படம், எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவை எப்படிப்பட்ட மாற்றங்கள், அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது... சொல்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்