ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

``தலைவருக்கு, குடும்ப ஜோசியர் மேல என்ன கோபம்?’’

`` `2016-ம் ஆண்டில் தலைமறைவா இருக்கிறது உத்தமம்’னு சொல்லியிருக்கார்!’’

- அம்பைதேவா


 ‘‘இது கோவலனின் செல்போன்கிறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?’’

‘‘அதுல ட்யூவல் சிம் இருக்கும் பாருங்க!’’

- சி.பி.செந்தில்குமார்


 ‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தையை, நாலு பேர் வந்து போற இடத்துல வெச்சுக்கலாம்!’’

``டாஸ்மாக் வசதியா இருக்குமா?’’

- அம்பைதேவா


``2016-ம் ஆண்டில் ஆட்சியை நாங்கள்தான் பிடிப்போம்!’’

``முதல்ல வேஷ்டியை ஒழுங்கா பிடிங்க தலைவரே!’’

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick