காத்திருந்து கழுத்தறுத்த சாதிவெறி!

#TNHonourkillingsபாரதிதம்பி, ஆ.விஜயானந்த், ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

ர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் மரணங்களுக்கு அடுத்து கொங்கு மாவட்டங்களைப் பதறவைத்திருக்கிறது சங்கர் என்கிற 23 வயது தலித் இளைஞனின் கொடூர மரணம். இது தொடர்பாக சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.

உடுமலைப்பேட்டை நகரம். மக்கள் நெரிசல் மிகுந்த யூ.கே.பி வணிக வளாகம். மதியம் 2:10 மணி. துணிக் கடைக்குள் செல்கிறது சங்கர்-கௌசல்யா ஜோடி. கையில் புதுத் துணிகளோடு மகிழ்ச்சியாக கரம் கோத்து வெளியே வருகிறார்கள். அந்த இடத்துக்கு மூன்று பைக்குகளில் நிதானமாக வந்து நிற்கிறது கும்பல் ஒன்று. காதலர்களை வளைத்துக்கொண்டு நின்றபடி, அந்த இளைஞனின் பின்பக்கம் வெட்டிச் சாய்க்கிறார்கள். இளம்பெண்ணின் தலையிலும் கழுத்திலும் பலமாக வெட்டு விழுகின்றன. ‘‘யாராவது காப்பாத்துங்கய்யா’’- இளம்பெண்ணின் கதறல் காற்றில் கரைகிறது. சுற்றி நின்றவர்கள், வேடிக்கை பார்க்கிறார்கள்; பதறி விலகுகின்றனர். இளைஞனைக் கொன்ற கும்பல், அருவாளை எடுத்துக்கொண்டு எந்தப் பதற்றமும் இல்லாமல் பைக்கில் நிதானமாகச் செல்கிறது. சி.சி.டி.வி-யில் பதிவான இந்தக் காட்சி, நாடெங்கும் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிறது. விரும்பிய பெண்ணைக் காதலித்துத் திருமணம்செய்து, எட்டு மாத காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த ஒரு தலித் இளைஞனை, நூற்றுக்கணக்கானோர் மத்தியில் நட்ட நடுரோட்டில் வைத்து வெட்டிச் சாய்த்திருக்கிறது ஒரு சாதி வெறிக் கும்பல்.

பொள்ளாச்சியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்துவந்தார், 23 வயதான சங்கர். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர்,  உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர். தந்தை வேலுச்சாமி, கூலி வேலைசெய்து வருகிறார். இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார், தேவர் சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யா. திண்டுக்கல்லில் இருக்கும் இவரது குடும்பமும் சாதாரணக் குடும்பம்தான். இருவரும் காதலிப்பது தெரிந்ததும், வழக்கம்போல `இது வேண்டாம்’ என மிரட்டியிருக்கிறார்கள் குடும்பத்தினர். முதலாம் ஆண்டோடு படிப்பையும் நிறுத்திவிட்டனர். ஆனாலும், அவர்களின் காதல் மட்டும் தீவிரமாக வளர்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்