“ஜெயிச்சிரலாம் சார்!” - தெருவோரத் தங்கங்கள்...

ஆ.விஜயானந்த், படங்கள்: தி.ஹரிகரன்

ர்மபுரி சுங்கரஹள்ளியைச் சேர்ந்தவர் அசோக். இவரது அப்பா சின்னத்தம்பி, எலெக்ட்ரீஷியன். அம்மா வசந்தா, வீட்டு வேலை செய்துவந்தார். ஒருநாள் பள்ளியைவிட்டு வீட்டுக்கு வந்த அசோக்குக்கு பெரிய அதிர்ச்சி. பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லை. `அம்மா எங்கே?’ என அழுதுகொண்டே கேட்க, ‘ரெண்டு பேரும் நாள் முழுக்க சண்டைபோட்டாங்க. பெட்டி, படுக்கையைத் தூக்கிட்டு எங்கேயோ போயிட்டாங்க’ என்ற தகவல் கிடைத்தது. அக்கா, தம்பியோடு தெருவில் நின்ற அசோக், பசிக்கொடுமை தாங்கமுடியாமல், தர்மபுரி ஸ்டேஷனில் நின்ற ரயிலில் ஏறிப் படுத்துவிட்டார். சென்னை வந்த அந்த ரயிலில் அசோக்கைக் கவனித்த போலீஸார், காப்பகத்தில் ஒப்படைத்தனர். முழு நேரமும் காப்பகத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர், 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்துப் போட்டியில் நேர்மை ஆட்டத்துக்கான விருதையும் வாங்கினார். அடுத்த வாரம் பிரேசிலில் நடக்க இருக்கும் தெருவோரக் குழந்தைகளுக்கான மினி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார். இவரைப்போல, அல்லிகுளம் ஹெப்சிபா, ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேஷன் சினேகா என தெருவோரச் சிறுவர்கள் ஐந்து பேரும் பிரேசிலுக்குப் பறக்கப்போகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்