ஜான் ஆலிவர் எஃபெக்ட்!

சார்லஸ்

`செம போரிங் டாபிக்' என மீடியா ஒதுக்கிய முக்கியமான விஷயங்களை எல்லாம் நகைச்சுவை கலந்து எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கி, அதற்கு எதிராக மக்களைப் போராடவைத்து தீர்வு பெறவைப்பது... என டி.வி ஷோவில் ஒரு புரட்சியையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார் ஜான் ஆலிவர்.

38 வயதான ஜான், பிரிட்டனில் பிறந்தவர்.ஸ்டாண்ட்அப் காமெடியனாக இங்கிலாந்தில் பிரபலமானவர், 10 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்குள்  நுழைந்தார். ‘தி டெய்லி ஷோ வித் ஜான் ஸ்டீவர்ட்’ என்னும் நிகழ்ச்சியில் ரிப்போர்ட்டராகக் களம் இறங்கியவர், இப்போது அமெரிக்காவின் `நம்பர் 1' நிகழ்ச்சியின் நாயகர்.

`ஒரு டி.வி காமெடியனால் இப்படி எல்லாம்கூட செய்ய முடியுமா?!' என உலகமே வியந்து பார்க்கிறது. அமெரிக்காவில் HBO சேனலில் ஒளிபரப்பாகும் ‘லாஸ்ட் வீக் டுநைட் வித் ஜான் ஆலிவர்’ எனும் நிகழ்ச்சியில் சிரிக்க வைத்துக்கொண்டே `பளார்' என கன்னத்தில் அறைந்தது போன்று உண்மையைப் புரியவைப்பதுதான் ஜான் ஆலிவர் ஸ்டைல்.

அமெரிக்காவில் `ஜான் ஆலிவர் எஃபெக்ட்' என்ற புது ட்ரெண்டே உருவாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் அவர் ஷோவில் என்ன பேசுகிறாரோ, அதுதான் அமெரிக்கா முழுவதும் பேசப்படும் டாபிக். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முயலும் டொனால்டு ட்ரம்ப்பை இவர் கலாய்த்ததில் உலக டிஆர்பி எகிறியது. ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ என்ற ட்ரம்ப்பின் கோஷத்தைச் சிரிக்கவைத்தே நொறுக்கினார் ஜான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்