மைல்ஸ் டு கோ... 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

ன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை பிரீஸ் ஹோட்டலில் மௌனிகா, விஜய் ஆதிராஜ், கிட்டி நடிக்கும் `மீண்டும் ஒரு காதல் கதை’ ஷூட்டிங். சார் என்னை அழைத்து “கிட்டிக்கு குர்தா கொடுத்துடு. மெளனிக்கு ‘போல்கா டாட்ஸ்’ கவுன் கொடுத்துடு” என்று சொன்னார். நான் காஸ்ட்யூமர் ரவியிடம் போல்கா டாட்ஸ் டிரெஸைக் கேட்க, அவர் “அந்த டிரெஸ் இங்கே இல்லை வெற்றி” என்றார். நானும் கெளரியும் தேடினோம். தர்மனும் சேர்ந்து தேட, அது கிடைக்கவே இல்லை. சாரிடம் விஷயத்தைச் சொன்னதும், கடுங்கோபமாகித் திட்டத் தொடங்கினார். அன்று அந்த லொக்கேஷனுக்கு ஒரு மணி நேரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை. அதைச் குறிப்பிட்டு, கவனமாக வேலையை முடிக்க வேண்டும் என எங்களிடம் சார் சொல்லியிருந்தார்.

ஒருவேளை ஆபீஸில் இருக்குமோ என்ற சந்தேகத்தில் போன் செய்து, அங்கு இருந்த முருகனைப் பார்க்க சொன்னோம். அவர் தேடிப் பார்த்துவிட்டு அங்கும் இல்லை என்றார். அப்போது, நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, `‘சார்... உங்க ரூம்ல இருக்குமா?'’ என்றேன். `‘வாய்ப்பே இல்லை’' என்றவர் ஒளிப்பதிவாளர் மூர்த்தியை அழைத்தார். அவர் `பயணங்கள் முடிவதில்லை' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாலு மகேந்திரா சாரின் நண்பர். `என்னுடைய வொர்க்கை 95 சதவிகிதம் மேட்ச் பண்ண முடியும்னா, அது மூர்த்தியால மட்டும்தான் முடியும்' என சார் அடிக்கடி சொல்வார். அவரை அழைத்து, தன் அறையின் சாவியைக் கொடுத்து ``மூர்த்தி, அந்த டிரெஸ் என் ரூம்ல இருக்குங்கிறான். போய்ப் பாருங்க'' என அனுப்பினார். நானும் மூர்த்தி சாரும் சாலிகிராமம் ஓடினோம். அவசரத்தில் சார் சாவியை மாற்றித் தந்திருந்தார். வேறு வழியின்றி பூட்டை உடைத்தோம். அறைக்குள்ளும் போல்காவைக் காணவில்லை. அப்போது போன் அடித்தது. கௌரிதான் பேசினார் ``வெற்றி, டிரெஸ் இங்கேதான் இருக்கு. உடனே வாங்க'' என்றார். அவசரமாக ஓடினோம்.

காஸ்ட்யூமர் ரவி, டிரெஸை அயர்ன் செய்து புள்ளியை உள்பக்கமாக மடித்து வெள்ளைப் பக்கத்தை வெளியே வைத்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்ததும் சார்தான். அன்று சாருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதற்கு மேல் எங்களை மட்டும் வைத்து வேலை செய்ய முடியாது என நினைத்தவர், மேனேஜர் சாயை அழைத்து ‘ஞானி என்ன பண்றான்னு பாரு?’ என்றார். அந்த ஞானிதான் தங்கவேலவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்