சவால்விடும் சூப்பர் ஹீரோஸ்!

கிங் விஷ்வா

ஜினி வில்லன்... கமல் ஹீரோ அல்லது அஜித் வில்லன்... விஜய் ஹீரோ இப்படி ஒரு காம்பி னேஷனில் ஒரு படம் வந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட படம்தான் `பேட்மேன் Vs சூப்பர்மேன்'. அதனால்தான் இந்த சூப்பர் ஹீரோ படத்துக்கு உலகம் முழுக்க அவ்வளவு எதிர்பார்ப்பு. பட்ஜெட், 1,674 கோடி ரூபாய். ‘300’ படத்தின் இயக்குநர் ஜாக் ஸ்னைடர் இயக்க, இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற பென் அஃப்லெக் இதில் பேட்மேனாக நடிக்கிறார். சூப்பர் மேனாக ஹென்றி  காவில் நடிக்கிறார்.

`வொண்டர் வுமன்’, `தி ஃப்ளாஷ்’, `அக்வாமேன்’, `சைபோர்க்’ போன்ற DC காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள், முதன்முதலாக இந்தப் படத்தில் தோன்றுகிறார்கள். `உனக்கு ரத்தம் வருமா... நிச்சயமா வரும்' என பேட்மேன், சூப்பர்மேன் பேசும் வசனம்தான் இப்போது இணையத்தில் வைரல்!

`காமிக்ஸில் மட்டும் அல்ல, ஹாலிவுட்டிலும் நாங்கதான் கெத்து' என, காலரைத் தூக்கிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறது மார்வெல் காமிக்ஸ். `அயர்ன்மேன்’, `தோர்’, `வோல்வரீன்’, `ஹல்க்’, `ஸ்பைடர்மேன்’ என ஒவ்வொரு ஹீரோவையும் வைத்து தலா இரண்டு படங்களாவது ஹிட் கொடுத்திருக்கிறது. கூடவே அனைவரையும் ஒன்றுதிரட்டி `அவெஞ்சர்ஸ்' என்ற பெயரில் படமாக எடுத்தும் பாக்ஸ் ஆபீஸைப் பதம் பார்த்துவருகிறது. ஏற்கெனவே கேப்டன் அமெரிக்காவும் அயர்ன்மேனும் மோதும் ‘கேப்டன் அமெரிக்கா - சிவில் வார்’ படம் ரிலீஸுக்கு ரெடி.

மார்வெல் காமிக்ஸின் போட்டி நிறுவனமான DC காமிக்ஸ் நிறுவனமோ, இதற்கு நேர்மாறாக எத்தனையோ சூப்பர் ஹீரோக்களைக் களம் இறக்கியபோதும் மார்வெல் அளவுக்கு வெற்றி காணவில்லை. `சூப்பர்மேனு’க்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலனின் `பேட்மேன்’ மட்டும்தான் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது. நடுவில் வெளியான `கிரீன் லேண்டர்ன்’ படுதோல்வியைச் சந்தித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்