ரஹ்மான் டிரீம்ஸ்!

சார்லஸ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

‘‘ரஹ்மான் சார் வீடு இருக்கிற சாமியார் மடம் எம்.ஜி.ஆர் மாநகராட்சிப் பள்ளியில் நான் 6-வது படிச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒருநாள் `ஏ.ஆர்.ரஹ்மான் சார், நம்ம ஸ்கூல் பசங்களுக்கு மியூஸிக் சொல்லித்தரப் போறார்'னு சொன்னாங்க. எனக்கு மியூஸிக்னா என்னன்னே தெரியாது. எங்க அப்பா அசோக் நகர்ல ரோட்டோரமா அயர்ன் பண்ற கடை வெச்சிருக்கார். நல்லா படிக்கிற பையன்கிறதால எங்க டீச்சர் என்னையும் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்பினாங்க’’ - உற்சாகமாகப் பேசுகிறார் பாலாஜி.

2009-ம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானால் 10 மாநகராட்சிப் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட `சன்ஷைன்' இசைக் குழு, இன்று முழுமையான ஒரு ஆர்க்கெஸ்ட்ராவாக மாறியிருக்கிறது. முதல் கட்டமாக இசை கற்க ஆரம்பித்த 10 பேரும், இப்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.கன்சர்வேட்டரியில் முழு நேரமாக இசை பயில்கிறார்கள். கூடவே ரஹ்மானின் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கும் பறந்துகொண்டிருக்கிறார்கள்.

‘‘ரஹ்மான் சார் ஸ்டுடியோவுக்கு வந்தபோது ஒரு ஃபாரின் லேடி, `உங்க எல்லாருக்கும் புதுசா ஒரு மியூஸிக் கத்துத்தரப்போறோம்'னு சொன்னாங்க. அப்போ எனக்கு அங்கே இருந்ததுலயே தெரிஞ்ச ஒரே இன்ஸ்ட்ருமென்ட் வயலின். ஆனா, `வயலின் வாசிக்க ஆட்கள் எடுத்தாச்சு. வியோல்லா, செல்லோ இருக்கு. இதுல நீங்க எதைக் கத்துக்கு றீங்க?'னு கேட்டாங்க. அந்தப் பெயர்களை எல்லாம் அப்பத்தான் நான் முதல் தடவையா கேள்விப்படுறேன். என்ன சொல்லலாம்னு முழிச்சுக்கிட்டு இருந்தப்போ ஸ்காட்லாந்துல இருந்து வந்திருந்த அந்த மேம் செல்லோல ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' படத்துல வர்ற மியூஸிக் பீஸை ப்ளே பண்ணாங்க. ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. உடனே `நான் செல்லோ கத்துக்குறேன் மேம்'னு கை தூக்கிட்டேன்’’ என்கிற பாலாஜி, இன்று சென்னையின் செல்லோ இசைக்கலைஞர்களில் ஒருவர்; சன்ஷைனில் இசை படித்துக்கொண்டே பத்தாம் வகுப்புத் தேர்வில் 491 மதிப்பெண்கள் அள்ளியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்