டிஜிட்டல் காதலி!

பா.ஜான்ஸன்

நாம் நினைத்ததுபோலவே ஒரு காதலியை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த தெறிஃபிக்கான ஐடியாதான் ‘ஃபுன்த்ரூ’ படத்தின் கதை.

இது, ஹாலிவுட், பாலிவுட் கதை அல்ல; ஸ்டைலிஷான மராத்திய சினிமா. ஸ்பைக் ஜோன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஹெர்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? தொழில்நுட்பம் எல்லாம் வேறு லெவலில் இருக்கும் காலத்தில், தனிமையிலேயே இருக்கும் ஒருவனுக்கும், கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கும் இடையேயான உறவுதான் ‘ஹெர்’ படத்தின் கதை. கிட்டத்தட்ட இதுவும் அதே கதைதான்.

கதையின் நாயகன் விரா (மதன் தியோதர்), இன்ஜினீயரிங்கில் ஒரு எலெக்ட்ரிக் டைகர். அவனுக்கு, தன் சீனியர் அனயா (கேடகி மேட்கோன்கர்) மீது காதல். ஆனால், அதை அவளிடம் சொல்ல விராவுக்குத் தைரியம் இல்லை. மேலும், அனயா - நவ்நீத் (சுருக்கமாக நானோ) இடையே இருக்கும் நெருக்கம் அவனுக்கு அதிக பயத்தைத் தருகிறது. அனயா - நவ்நீத் உறவு காதலாகும் சமயத்தில் விரா தன் காதலை அனயாவிடம் சொல்கிறான். அவள், அவனை நிராகரித்துவிடுகிறாள். அந்த விரக்தியில் இருக்கும் விராவுக்கு, `நாம் விரும்பிய அனயாவை நாமே உருவாக்கினால் என்ன?’ என ஒரு ஐடியா வருகிறது. தன் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, கல்லூரியின் நிறுவனர் ஷங்கர் ராவின் முடிக்கப்படாத புராஜெக்டை கையில் எடுத்து அந்த வேலையில் இறங்குகிறான். புராஜெக்ட் சக்சஸ். தான் நினைத்த மாதிரியே டிஜிட்டல் அனயாவை உருவாக்கி, தன் காதலி ஆக்கிகொள்கிறான். டிஜிட்டல் கேர்ள் ஃப்ரெண்டை ரியல் ஆக்கும்போதுதான் டரியல் ஆரம்பிக்கிறது. என்ன பிரச்னை வருகிறது... அதை விரா சமாளிக்கிறானா என்பதே மீதிக் கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்