“அடுத்தது ஹீரோயின்!”

பா.ஜான்ஸன்

`காதலும் கடந்து போகும்' மடோனா, `கத்தி' சமந்தா, `ஐ' ஏமி ஜாக்ஸன், `பாயும் புலி' காஜல் அகர்வால்... என கோலிவுட்டின் பாதி ஹீரோயின்களுக்குக் குரல்கொடுப்பவர் ரவீணா. போன் போட்டால் மடோனாவிடம் பேசுகிறோமா, சமந்தாவிடம் பேசுகிறோமா என ஒரே குழப்பம்.

``ஹாய்... ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகாதீங்க. நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா. என்னோட அம்மா ஜா ரவி டப்பிங் ஆர்டிஸ்ட். எனக்கு ஒன்றரை வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ `தொட்டாச்சிணுங்கி' படத்தோட ஹீரோயினுக்கு அம்மா டப்பிங் பேசியிருந்தாங்க. நான் அம்மா சொல்றதை அப்படியே ரிப்பீட் பண்ணிட்டிருந்தேன். அதைப் பார்த்த டைரக்டர் `இவ குரல் ரொம்ப க்யூட்டா இருக்கே’னு சொல்லி ரெக்கார்ட் பண்ணினாங்க. அங்க ஆரம்பிச்சதுதான்... `வுட்வர்ட்ஸ் குடு... நீ குழந்தையா இருக்கச்ச நானும் அதான் கொடுத்தேன்'னு ஒரு சின்னப் பொண்ணு சேலை கட்டிட்டு வருமே அதுக்கு, பியர்ஸ் சோப், ஹார்லிக்ஸ்னு சின்னச்சின்னதா விளம்பரங்கள்ல வாய்ஸ் கொடுத்தேன். சினிமாவில் என் முதல் படம் `சாட்டை’.’’

``நீங்கள் குரல்கொடுக்கும் நடிகைகள் கூப்பிட்டுப் பாராட்டி இருக்காங்களா?’’

``நயன்தாரா மேடம் `பாஸ்கர் தி ராஸ்கல்' பார்த்துட்டு `நல்லா பண்ணியிருக்கே’னு மெசேஜ் பண்ணாங்க. மடோனா செபாஸ்டின் `காதலும் கடந்து போகும்' ட்ரெய்லர் ரிலீஸ் ஆன சமயத்திலேயே மெசேஜ் பண்ணி விஷ் பண்ணாங்க. ஏமி ஜாக்சன், ` `ஐ’ படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் இருக்கு, என் அம்மா, அப்பா வர்றாங்க. நீயும் உன் குடும்பத்தோட வந்தா சந்தோஷமா இருக்கும்’னு சொல்லி அழைச்சிட்டுப் போனாங்க. நிறைய இன்டர்வியூஸ்ல என் பேரைச் சொன்னாங்க. ஏமி செம ஸ்வீட் கேர்ள்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்