தமிழ் சினிமாவின் ஆவணக்காரர்!

தமிழ்மகன்

த்திரிகையாளர்களுக்கான பிரத்யேகப் படக்காட்சிகளில், திரையரங்கின் முதல் வரிசையில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் இருப்பார். அவர் படம் பார்த்து முடித்ததும் படக் குழுவினரிடம் மெல்லியக் குரலில், ‘படம் எப்போ சென்ஸார் ஆச்சு?’, `எத்தனை ரீல்?’, `எத்தனை பிரின்ட் போட்டீர்கள்?’ என இன்னும் சில கேள்விகளைக் கேட்பார். சிலர், அந்த விவரம் தெரியாது விழிப்பார்கள். இன்னும் சிலர் `இதெல்லாம் எதுக்கு?’ என உள்ளுக்குள் எரிச்சல் அடைவார்கள். ஆனால், 1931-ம் ஆண்டில் வெளியாகி தமிழ்ப் பேசிய முதல் படமான ‘காளிதாஸ்’ முதல் சமீபத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ வரை கிட்டத்தட்ட 6,000 படங்கள் பற்றியத் தகவல்களை அவர் அப்படித்தான் திரட்டினார். `சாதனை படைத்த தமிழ்ப் படங்கள்’ என்ற ஆயிரம் பக்கத் தகவல் திரட்டை அவர் அப்படித்தான் உருவாக்கினார்.

அந்த நூல், தமிழ் சினிமாவின் அகராதி; வரலாறு; ஒரு தனி மனிதன் செய்த சாதனை.

ஆனந்தனுக்கு பூர்வீகம் சென்னை. அவரது நண்பர் நடத்திய `ஃபிலிம் நியூஸ்’ பத்திரிகையில் இவர் எடுத்த படங்கள் வெளிவந்ததால், ஆனந்தன் என்பவர் `ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் ஆனார். தமிழின் முதல் பேசாத படமான ‘கீசகவதம்’ தயாரிப்பாளர் நடராஜ முதலியாரைத் தேடிச்சென்று புகைப்படம் எடுத்தவர் இவர்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்