“விஜயகாந்தை ஒரு தலைவராகவே ஏற்கவில்லை!” - சீமான்

“விஜயகாந்த் ம.ந., கூட்டணிக்கு வரவேண்டும்!” - அருணன்ஆ.விஜயானந்த், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்துஓவியம்: கண்ணா

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பேராசிரியர் அருணனும் கலந்துகொண்ட ஒரு டி.வி. நிகழ்ச்சி கடந்த வாரம் இணையம் எங்கும் பரபரப்பாகப் பகிரப்பட்டது. சீமான், அருணனை `யோவ், லூஸு மாதிரி பேசாத' எனச் சொல்ல,  பதிலுக்கு அவரும் திட்ட, ஒரே ரகளையானது.

இந்த இருவரையும் பிடித்து, பொதுவான கேள்விகளை முன்வைத்தோம்.

``சட்டமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான மாற்றம் உருவாகும்... அதை உருவாக்கப்போகும் கட்சி எது?’’

சீமான்: ``தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று தி.மு.க என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஆள்தான் மாறுகிறார்கள்; ஆட்சிமுறை மாறவில்லை. இருவரும் லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள். அரை நூற்றாண்டாக  தமிழ்நாட்டு வளங்களைச் சுரண்டுபவர்கள். இவர்களை மாற்றக்கூடிய உண்மையான மாற்று நாங்கள் மட்டும்தான். மக்கள் நலக் கூட்டணி என்பது எல்லாம் பெரிய ஏமாற்று.''

அருணன்: ``1971-ம் ஆண்டில் இருந்து தமிழகத் தேர்தலை நேரடியாகக் கவனிக்கிறேன். இதுவரை நடந்தது எல்லாம் தொகுதி உடன்பாடு மட்டும்தான். கொள்கை அடிப்படையில் அமைந்தது,  மக்கள் நலக் கூட்டணி மட்டும்தான். கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். மக்கள் நலக் கூட்டணியே ஒரே மாற்று.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்