“திராவிட அரசியலுக்கு மாற்று என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!”

மா.அ.மோகன் பிரபாகரன்

``தொலைக்காட்சி விவாதங்களில் நான் பங்குபெறுவது இல்லை. முக்கியமான கருத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, `ஒரு சிறிய இடைவேளை’ என விளம்பரம் போடுவார்கள். ‘வரவு பார்த்துவிட்டு உன்னை உளறவிடுகிறேன்’ என்பதுதான் அதன் உள் அர்த்தம். முதலாளித்துவச் சூத்திரத்தையும் சுரண்டலையும் மார்க்ஸிடம் இருந்து கற்றவன் நான். வெறும் உணர்ச்சிகளை வைத்துக்கொண்டு குடுகுடுப்பை ஆட்டம் ஆடும் பாமரத்தனமான அரசியல்வாதி அல்ல. அதனால் ஊடக விவாதங்களில் பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை”

- `இத்தனை நாட்களாக ஊடகங்களில் உங்களைப் பார்க்க முடியவில்லையே?’ என்ற கேள்விக்குத்தான் இப்படிப் பொரிந்துதள்ளினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்.

``அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?’’

``நான் ஓர் ஏகலைவன். என்னுடைய அண்ணன் பொதுவுடமைத் தத்துவச் சிந்தனைகளை என்னுள் விதைத்தபோது, அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்டேன். 1953-ம் ஆண்டில் அடிப்படை உறுப்பினர் ஆனேன். நானும் ஒரு காலத்தில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டேன். பிறகு, 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் எந்த நிபந்தனையும் இன்றி கட்சிக்குள் இணைந்து கொண்டேன்.
சுதந்திரம் பெற்ற பிறகுதான் பதவி ஆசை வந்தது. புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த நாடுகளில்கூட, வெற்றி அடைந்த பிறகு தனது பரம்பரைக்குத்தான் சொத்து சேர்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். காரணம், ஆடம்பரம், ஆசை. அதைத் தடுக்க முடியாது. எல்லா கட்சிகளிலும் மனிதர்கள்தானே இருக்கிறார்கள்; தேவதூதர்களே தொண்டர்களாக இருப்பது இல்லையே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்