சீஜோ, சுஷி, சாட்டே நூடுல்ஸ்...

ப்ரீத்தி, படங்கள்: இரா.யோகேஷ்வரன், நா.ராஜமுருகன், க.சர்வின்

ங்கள் வீடு அருகே இப்போது என்ன மாதிரியான ஹோட்டல்கள் இருக்கின்றன? ஐந்தில் ஒன்று நிச்சயம் அரேபியன் ஹோட்டலாக இருக்கும். 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் சைனீஸ் உணவகங்கள் பெருகியதைப்போல இப்போது அரேபியன், பார்பிக்யூ, மெக்ஸிகன், இத்தாலியன் உணவகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன.

இட்லி, கல்தோசை, பரோட்டா என நம் இரவு  உணவுமுறையை முதலில் தலைகீழாக மாற்றியது சைனீஸ் படையெடுப்பு. ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், சில்லி சிக்கன் என சைனீஸ் உணவுகள் பலரது விருப்பமாக மாறி, தெருவுக்கு இரண்டு ஃப்ரைடு ரைஸ் கடைகள் முளைத்தன. இதில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ‘மோனோ சோடியம் க்ளுட்டமேட்’ எனும் உப்பு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்கிற விழிப்புஉணர்வு பெருக ஆரம்பித்ததும் ஃப்ரைடு ரைஸ் கடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்