“தமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது!”

கதிர்பாரதி, படங்கள்: கே.ராஜசேகரன்

ன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின் மதிக்கத்தக்க கலை ஆளுமை.

``ஒருவகையில் இது எனக்கு ரெண்டாவது பிறப்பு. மரணத்தோட பின்வாசல் வரைக்கும் போயிட்டு வந்துட்டேன். போன வருஷம் மே மாசத்துல ஒருநாள்... ஒரு கூட்டத்துல பேசிட்டு வீட்டுக்கு வரும்போதே என் உடம்பு துவள ஆரம்பிச்சிருச்சு. மறுநாள் காலையில் கடைத்தெருவுக்குக் கிளம்பும்போது, அப்படியே சுருண்டு விழுந்துட்டேன். சுத்தமா நீர் பிரியலை. நெஞ்சு வரைக்கும் ஏறி வந்திருச்சு. சளி, நெஞ்சை அடைச்சது. மூச்சுவிட முடியலை. மரணம், என் கண்ணுக்கு முன்னாடி தெரியுது. கீழே விழுந்ததுல தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தம் ஒழுக ஆரம்பிச்சிருச்சு. அது நின்னாதான் சிகிச்சை ஆரம்பிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. நினைவு இழக்க ஆரம்பிச்சுட்டேன்.

என் நீண்ட தலைமுடியையும் அடர்ந்த தாடியையும் மழிச்சிட்டாங்க. அதுலயே என் பாதி அடையாளம் போயிருச்சு. செய்தி கேள்விப்பட்டு அண்ணன் வைகோ, எம்.நடராசன், சீமான், பழ.நெடுமாறன், அய்யா வே.ஆனைமுத்து, பெ.மணியரசன்... எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்க. இவங்களை  எல்லாம் பார்த்ததும் சிகிச்சை இன்னும் வேகமா நடந்துச்சு. இப்படித்தான் உயிர்  பிழைச்சு வந்து பழைய சந்தானமா உங்க முன்னாடி நடமாடுறேன். மண்ணையும் மக்களையும் உயிரா நேசிக்கிற ஒரு கலைஞனை, இந்தச் சமூகம் கைவிட்டுடாதுங்கிறதுக்கு உயிர் சாட்சியா நிக்கிறேன்’’ - ஓவியர் வீரசந்தானத்தின் கண்கள் நெகிழ்ச்சியின் ஈரத்தில் மின்னுகின்றன.

மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரியும் இந்தக் கலைஞனுக்கு வயது 70. சமீபத்தில் இவர் வரைந்த `சகட யாழ்’, `மகர யாழ்’, `காமதேனு’ என தமிழர் அடையாள ஓவியங்கள் சுற்றிக் கிடக்கின்றன. இந்த ஓவியங்களையும் இவரது பள்ளிக்கால ஓவியங்களையும் ஒன்றுதிரட்டி, கிழக்கு கடற்கரை சாலை `தக்‌ஷன் சித்ரா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஓவியர் கீதா.  `காமதேனு' என்ற பெயரில் வீரசந்தானத்தைப் பற்றி ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்