மைல்ஸ் டு கோ... 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இயக்குநர் வெற்றி மாறன், படம்: ஸ்டில் ராபர்ட்

ன்னை வேலைக்கு வர வேண்டாம் என சார் சொன்னதும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் என்னை வேலையைவிட்டு நிறுத்தியதைவிட, எதற்காக நிறுத்தினார் என்ற குழப்பம்தான் என்னை அதிகம் உறுத்தியது. அதைப் பற்றி அவர் வேறு யாரிடமும் பேசவில்லை. மற்ற உதவி இயக்குநர்களிடம், ‘வெட்டி இனிமே வேலைக்கு வர மாட்டான். அவன் வேலையை நீங்க ஷேர் பண்ணிக்குங்க’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

`எதற்காக என்னை வேலையைவிட்டு நீக்கினார் என்பது தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் பிறகு, பல முறை முயன்றும் சார் என்னைச் சந்திக்கவே இல்லை. நான் இல்லாமலேயே ‘நிஜத்தைத் தேடி’ கதையின் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது மேனேஜர் சாய், மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். `அவன் என்னைப் பார்க்க வந்துக்கிட்டே இருக்கான். வேணும்னா இன்னைக்கு எடிட்டிங் வரச்சொல்லு' என சார் சொல்லி அனுப்பியிருந்தார். நான் எடிட்டிங் அறைக்கு ஓடினேன். வீட்டுக்கு வரச் சொன்னார். அங்கே போனால், ‘`ஆபீஸுக்குப் போ... வர்றேன்’’ என்றார். இப்படியே இரண்டு நாட்கள் சந்திக்காமலேயே தவிக்கவிட்டவர், ஒருநாள் சந்தித்தார்.

“உங்களுக்கு எல்லாம் நீங்க எந்த இடத்துல இருக்கீங்கங்கிறது புரியலைடா. தாய்க்கோழி தன் குஞ்சுகளை றெக்கைக்குள்ளே பொத்திப் பொத்தி வெச்சுக்கிற மாதிரி நான் உங்களைப் பாதுகாக்குறேன்ல. அதனாலதான் உங்களுக்கு என் அருமை தெரியலை. வெளியே போய்ப் பாருங்கடா, சினிமா எவ்ளோ கஷ்டங்கிறது உங்களுக்குப் புரியும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்