வெள்ளிக்கிழமை இரவுகள்

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்

தோ காட்டு மிருகம் துரத்தியதுபோல் உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பன்னிரண்டு வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையைத் தூக்கி கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல் இரண்டு பக்கங்களும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல் அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

தாயார், சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப்பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியில் இருந்து வரும்போதே சண்டைபிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா, தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நான்கு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் ஆகவி தலைவைத்துப் படுக்க, அகிலா முடியைக் கோதிவிட்டார்.

`‘கோதாதே... என் தலையை இறுக்கி அழுத்து...’' என்று கத்தினாள்.

தாயார், மகளின் தலையை இரண்டு கைகளாலும் அமத்திப் பிடித்தார்.

``சரி, உன் பொய்களால் என் மண்டையை நிரப்பு'’ என்றாள்.

இவ்வளவு ஆவேசமாகவும் கோபமாகவும் ஆகவி பேசியதே இல்லை. அகிலாவுக்கு, மகளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும்.

`‘நீ முதலில் சாப்பிடு. பின்னர் யார் உனக்கு நான் பொய் பேசியதாகச் சொன்னார்கள்... அதைச் சொல்லு?’’

`‘ஒல்லிப்பிச்சான் மைக்தான் சொன்னான்.'’

`‘அவனுக்கு எப்படித் தெரியும்?'’

`‘அவனுக்கு எல்லாம் தெரியும். அவனுக்கு இரண்டு அப்பாக்கள். இருவருமே விமானங்கள் திருத்துவார்கள்.'’

‘`விமானம் திருத்தினால், அவர்களுக்கு எல்லாம் தெரியுமா... வேறு என்ன சொன்னான்?’'

`‘என்னுடைய அப்பா ஓடிவிட்டாராம்.'’

`‘அதற்கு நீ என்ன சொன்னாய்?’'
 
`‘ `கழுதைப் பல், சதுரப் பல்' என்று திட்டினேன்.’’

`‘எதற்கு அப்படித் திட்டினாய்?’'

`‘எனக்கு அதனிலும் மோசமான வசவு தெரியாதே.’'

``அவன் என்ன சொன்னான்?’'

`‘ `உன்னுடைய அம்மா, உன்னை வீசிவிட்டு தொப்புள்கொடியை மட்டும் வைத்திருக்கலாம்’ என்றான்.’’

``அப்படியா..! நீ என்ன சொன்னாய்?'’

‘` `நீயே பார்வைக்கு ஒரு தொப்புள்கொடி போலத்தானே இருக்கிறாய்?' என்றேன். அப்போது மணி அடித்துவிட்டது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்