வெற்றிவேல் - சினிமா விமர்சனம்

ண்பனுக்குப் பதில், தம்பியின் காதலுக்காக வேட்டியை மடித்து வேலையை முடிக்கும் `நாடோடிகள் பாண்டியன்'தான் இந்த `வெற்றிவேல்'. பாட்டிகளுடன் ஓப்பனிங் பாடல், இடையில் காதலும் காமெடியும், ரத்தம் தெறிக்கும் க்ளைமாக்ஸ், அது முடிந்ததும் ஒரு மெசேஜ் என சசிகுமார் படங்களில் இருக்கும் எல்லா செக் பாக்ஸுகளையும் டிக் அடித்துக்கொள்ளுங்கள்.

வாத்தியாருக்குப் பிறந்த படிக்காத சசிகுமாருக்கு, ஒரு தம்பி, ஒரு காதல், ஓர் உரக்கடை, ஒரு நண்பன். காலேஜில் படிக்கும் தம்பி, பக்கத்து ஊர் தலைவர் பிரபுவின் பெண்ணைக் காதலிக்கிறார். பிரபு தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளைத் தொடங்க, சசிகுமார் அண்ட் கோ களம் இறங்குகிறது. திருவிழாவில் பெண்ணைத் தூக்க நினைத்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். பெண்ணை மாற்றித் தூக்கிவிட, அந்தப் பெண் வீட்டில் அடுக்கடுக்காகப் பிரச்னைகள். வாழ்வு இழந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கை தரும் சசி, தம்பியை எப்படி வாழவைத்தார் என்பதே 142 நிமிடக் கதை.

‘பிரம்மன்’, ‘தாரை தப்பட்டை’ என கொஞ்சம் ரூட் மாறியவர், மீண்டும் சொந்தத் தொகுதியில் ஸீட் வாங்கியிருக்கிறார். `டபுள் சிம் செல்போன் குடுப்பீங்களா?’ எனக் கேட்கும் மக்களுக்கு, அதே அரதப்பழைய தேர்தல் வாக்குறுதிகளைத் தந்ததுதான் மைனஸ். (ஓப்பனிங் பாடலில் பரதம் மட்டும் புதுசு). பிரபுவைப் பார்த்தாலே மரியாதையில் எழுந்து நிற்கத் தோன்றுகிறது. ஆனால், திரைக்கதைதான் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. மியா ஜார்ஜைவிட இன்னொரு நாயகி நிகிலாவின் முகம் மெமரியில் சேவ் ஆகிறது. விஜி, இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் மட்டுமே மாஸ் நடிகர்கள் கும்பலில் தனித்துத் தெரிகிறார்கள். அந்த நாடோடிகள் கேங் என்ட்ரி, சம்மருக்குக் கிடைத்த சர்பத்.

சசிகுமாருக்கு, விரதம் இருந்து ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வசந்தமணி. இதற்கு முன் சசியை இயக்கிய குருசாமிகள் சொன்னதைக் கேட்டு நடக்கலாம். கேட்டுக்கொண்டே நடந்ததால், அப்படியே வந்திருக்கிறது. சாதிகளின் பெயரை வெளிப்படையாகச் சொல்லாதது மட்டுமே ஓர் ஆறுதல். ஒருசில வசனங்களும், யோசிக்கவிடாமல் பரபரவென நகரும் திரைக்கதையும் பி அண்ட் சி சென்டர்களில் காப்பாற்றலாம். ஆனால், இது போதாது ப்ரோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்