"மலையாள சினிமாவை உலகமே கவனிக்குது!”

பா.ஜான்ஸன், படம்: தி.குமரகுருபரன்

லையாள சினிமாவின் நம்பிக்கை இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன். பாடகர், நடிகர், இயக்குநர், கதாசிரியர் என ஏகப்பட்ட ரோல்கள். நிவின் பாலியைக் கண்டுபிடித்து திரையுலகத்துக்குக் கொடுத்த கொலம்பஸ் இவரேதான்.

 ``என் படங்கள்ல நகைச்சுவை கொஞ்சம் தூக்கலா இருக்கும். ஆனால் `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்' சீரியஸான உணர்வுகளைப் பற்றிய படம். அந்தப் படம் வெளியாகும் வரை பயந்துட்டே இருந்தேன். ஆனா, இப்போ எல்லாருக்கும் படம் பிடிச்சிருச்சு'' - உற்சாகமாகப் பேசுகிறார்.

`` `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', `தட்டத்தின் மறயத்து', `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்கள். எப்படி இருக்கு?’’

`` `மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' எனக்கு இயக்குநராகவும், நிவின் பாலிக்கு நடிகராகவும் முதல் படம். முழுக்கவே இளைஞர்கள் டீம். ஏழு நண்பர்கள் பற்றிய கதை. எழுதின ஸ்கிரிப்டைப் பக்காவா ஷூட் பண்ணோம். படம் நல்லா போச்சு. அடுத்து `தட்டத்தின் மறயத்து' காதல் கதை. அந்த மெல்லிய ரொமான்ஸ் எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. உண்மையில் நடந்த ஒரு கதைதான் `ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்ஜியம்'. என் நண்பர் குடும்பம் துபாய்ல சந்திச்ச, அனுபவிச்ச விஷயங்களைத்தான் படமா எடுத்தேன். நிஜ விஷயங்களைப் படமா எடுக்கும்போது எல்லோரும் தங்களை அதோடு தொடர்பு படுத்திக்கிறாங்க... படத்துக்கும் வெற்றி கிடைக்குது.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்