பாட்டு கேட்டால் காசு! - Doopaadoo.com

கார்க்கிபவா, படம்: மீ.நிவேதன்

``இங்கே இன்டர்நெட் பிசினஸ் என்றாலே, `இங்கிலீஷ்ல வெற்றிபெற்ற ஓர் இணையதளத்தை அப்படியே நம்ம ஊருக்கு ஏற்றமாதிரி மாத்துறது’னு ஒரு பேச்சு இருக்கு. ஆனா, `டூபாடூ' அப்படி அல்ல. இது முழுக்க முழுக்க எங்களோட பிரெய்ன் சைல்டு’' - தம்ஸ்அப் காட்டி ஆரம்பிக்கிறார் மதன் கார்க்கி. கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் பாடலாசிரியர், அதற்கு சற்று ஓய்வுதந்துவிட்டு முழுமூச்சுடன் புதிய புராஜெக்டில் களம் இறங்கியிருக்கிறார். அது என்ன டூபாடூ?

“மேற்கத்திய நாடுகள் மாதிரி இல்லை இந்தியா. இங்கே எல்லா இடங்களிலும் பைரஸி அதிகம். இசையில் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட சினிமா மட்டுமே முக்கியமான தளமா இருக்கு. யூடியூப் மாதிரி சில விஷயங்கள் வந்திருந்தாலும், அதில் பிரபலம் கிடைக்குது. ஆனா, வருமானம் இல்லை. இவ்வளவு கோடிப் பேர் ரசிக்கிற சினிமாவுலகூட ஆடியோ கம்பெனிகள், `காசு வர்றது இல்லை’னு சொல்றாங்க. நம்ம சூப்பர் ஸ்டார்ஸ் நடிக்கிற, முன்னணி இசையமைப் பாளர்கள் இசையமைத்த படங்களையே ஐட்யூன்ஸ்ல 1,000 பேர்தான் டவுண்லோடு பண்றாங்க. தேவை இருக்கு. ஆனா, அந்த வருமானம் முறையா படைப்பாளிகளுக்குப் போய்ச் சேர்றது இல்லை. அது ஏன்னு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் `டூபாடூ' ” என்கிறார் மதன் கார்க்கி.

இவருடன் கவுந்தேயா மற்றும் சரவணன் ஆகியோரும் இந்த புராஜெக்ட்டில் இணைந்திருக்கின்றனர்.

`டூபாடூ' என்பது, பாடல்களைக் கேட்டு மகிழ உதவும் ஓர் இணையதளம். இதற்கு யார் வேண்டுமானாலும் தங்கள் பாடல்களை அனுப்பலாம். டூபாடூவில் இருக்கும் விமர்சகர்கள் அந்தப் பாடலைக் கேட்டு `சரி'யென்றால், அந்தப் பாடல் ரசிகர்கள் பார்வைக்கு வரும். கிடைக்கும் ஒவ்வொரு ஹிட்ஸுக்கும் பணம் உண்டு. அந்தப் பாடல் சம்பாதிக்கும் பணத்தில், 50 சதவிகிதம் டூபாடூவுக்கும், 40 சதவிகிதம் அந்தப் பாடலை உருவாக்கியவருக்கும், 10 சதவிகிதம் அதைக் கேட்பவருக்கும் செல்லும். ஆம், பாடலைக் கேட்கும் ரசிகர்களுக்கும் பணம் தருகிறது டூபாடூ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்