`உதயநிதி படங்களில் இதுதான் பெஸ்ட்!'

`` `என்றென்றும் புன்னகை’ ரிலீஸ் ஆனப்ப உதயநிதி என்னைக் கூப்பிட்டு, `நாம சேர்ந்து படம் பண்ணலாம் பாஸ்'னு சொன்னார். ‘இதயம் முரளி’னு ஒரு காதல் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, அதுக்கான பட்ஜெட் ரொம்பப் பெருசா இருந்தது. அந்த பட்ஜெட் இப்ப வேணாம்னு உதய் நினைச்சப்ப, ‘ஜாலி எல்.எல்.பி’ங்கிற இந்திப் படத்தைப் பற்றி அவர்கிட்ட சொன்னேன்.

அவரும் தன்னோட வழக்கமான காமெடியில் இருந்து விலகி, வித்தியாசமா ஒரு படம் பண்ணணும்னு நினைச்சார். நானும் `என்றென்றும் புன்னகை’ வாசனையே இல்லாம ஒரு படம் பண்ண நினைச்சேன். எங்க ரெண்டு பேருக்கும் தேவையான எல்லா விஷயங்களும் இந்தக் கதையில் இருந்தது. உடனே ஆரம்பிச்சுட்டோம்” - நிதானமாகப் பேசுகிறார் `மனிதன்’ படத்தின் இயக்குநர் அஹமது.
 
`` `மனிதன்’ படத்தின் கதை என்ன?”

``வாழ்க்கையில் பெருசா ஏதாவது சாதிக்க நினைக்கிற ஒரு வக்கீல் சென்னைக்கு வர்றார். திறமையான உச்ச நீதிமன்ற வக்கீல் ஒருத்தரை எதிர்த்து ஒரு வழக்குல ஆஜர் ஆகவேண்டிய சூழ்நிலை வருது. அந்த வழக்கு, அவரோட வாழ்க்கையையே புரட்டிப்போடுது. அந்த வழக்கும் அவரோட வாழ்க்கையும் என்ன ஆச்சுங்கிறதுதான் ‘மனிதன்’.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்