"மாணவர்கள் கையில் எதிர்காலம்!”

நிலம்... நீர்... நீதி! மு.சித்தார்த், படங்கள்: பா.காளிமுத்து

டந்த ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தமிழகத்தை நிலைகுலைய வைத்தது மழை வெள்ளப் பேரழிவு. இதுபோன்று எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் நீர்நிலைகளைக் காக்கும் முயற்சியாக, வாசன் அறக்கட்டளை மூலமாக ‘நிலம்... நீர்... நீதி’ என்கிற இயக்கத்தை முன்னெடுத்துள்ளது விகடன்.

இதன் ஒரு கட்டமாக நீர்நிலைகள் பற்றிய ஆய்வு, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகள் என, பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. இந்த வரிசையில், சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் ‘மக்கள் கருத்துப் பகிர்வுக் கூட்ட’த்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய சுற்றுச் சூழலியலாளர்கள் அமைப்பு (EFI), லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் கைகோத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் பேசிய லயோலா கல்லூரியின் பூச்சியியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை இன்னாசிமுத்து, “ `டைம்ஸ்' பத்திரிகை, சில ஆண்டு களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில், `மூன்றாம் உலகப்போர் தண்ணீரால்தான் உருவாகும்’ எனக் கூறப்பட்டிருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையைக்கூடச் சேர்த்துவைக்க முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது போன்ற நிகழ்ச்சிகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நிச்சயம் ஒரு வழித்துணையாக அமையும். அதுவும் விகடன் குழுமம் இதுபோன்ற பணிகளை கையில் எடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. அதில் அவர்களோடு லயோலா கல்லூரியும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்