சென்னையில் ஓர் ஆண்டிப்பட்டி! - ஆர்.கே நகர் கள நிலவரம்

பாரதி தம்பி, படங்கள்: ப.சரவணகுமார்

ர்.கே நகரில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் பதவியை இழந்தவருக்கு மகுடம் சூட்டிய தொகுதி, இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறது?

வடசென்னையின் இதயப் பகுதியில் இருக்கும் ஆர்.கே நகர் தொகுதி, 1977-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இதுவரை 10 தேர்தல்கள் பார்த்த தொகுதி.  தி.மு.க இரண்டு முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளன. ஆறு முறை  அ.தி.மு.க-வுக்கே வெற்றி. ஒட்டுமொத்த சென்னை நகரமும் தி.மு.க-வின் கோட்டை எனச் சொல்லப் பட்ட காலத்தில்கூட, ஆர்.கே நகர் மட்டும்
அ.தி.மு.க-வின் பக்கமே நிற்கும். தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,40,543 பேர். இதில் சரிபாதி பெண்கள். ஊரில் பாதிப் பேர் ‘இரட்டை இலை’யின் அனுதாபிகள்.

‘‘ஓட்டு போட ஆரம்பிச்ச காலத்துல இருந்து ரெட்ட எலைக்குத்தாங்க ஓட்டு போடுவேன். எங்க வூட்டுக்காரரும் அப்படித்தான். ஏன்னு கேட்டா, அது எம்.ஜி.ஆர் கட்சி... அவ்வளவுதான். திடீர்னு வேற எதுக்கோ எப்படிங்க ஓட்டு போடுறது?’’

‘‘ரெட்டலைக்கு ஓட்டு போடவேண்டியது என் கடமை. அவங்க நமக்கு நல்லது செய்றாங்களா, இல்லையாங்கிறது வேற. அதை அவங்கதான் செய்யணும். நம்ம கடமையை நம்ம செஞ்சிடணும்.’’
‘‘இது ஏ.டி.எம்.கே கோட்டை சார். `அம்மா’னு இல்லை, ரெட்டலைச் சின்னத்துல ஒரு காக்கா, குருவி நின்னாலும் ஜெயிக்கும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்