"விராட் கோஹ்லி மாதிரி ஃபுல் ஃபார்ம்ல இருக்கார்!”

அதிஷா, நா.சிபிச்சக்கரவர்த்திபடங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன், அ.குரூஸ்தனம்

`93 வயதாகிவிட்டது, இனி அவரால் முன்புபோல ஊரெல்லாம் சுற்றி பிரசாரம் பண்ண முடியாது, சென்னையில் மட்டும்தான் பேசுவார், அவரால் மேடையேறி முன்புபோல முழங்க முடியாது' என எதிர்க் கட்சிகள் நினைக்க, உடன்பிறப்புகளே கவலைப்பட்ட, அத்தனையையும் பொய்யாக்கி அதிரடியாக பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி. சென்னையில் தொடங்கி, கடலூர், திருவாரூர் வழியாக மே 14-ம் தேதி வரை இரண்டு கட்டமாக அடுத்த 15 நாட்களுக்கு கலைஞர் எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது.

ஏப்ரல் 23-ம் தேதி மதியம் தன் கோபாலபுரம் வீட்டில் இருந்து பிரசாரத்துக்குக் கிளம்பிய கருணாநிதியை நாள் முழுக்கப் பின்தொடர்ந்தோம்... 


மதியம் 1 மணியில் இருந்தே கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வெளியே தொண் டர்களும் பெண்களும்  மீடியாவும் குவிந்திருந்தனர். வீட்டுக்கு வெளியே காது கிழியும் அளவுக்கு பேண்டு வாத்தியங்களும் மேளதாளங்களும் முழங்கின. எல்லோர் முகத்திலும் அவ்வளவு உற்சாகம். கருணாநிதி எப்போது புறப்படுவார் என 101 டிகிரி வெயிலிலும் தொப்பலாக நனைந்திருந்த தொண்டர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

  கருணாநிதியை நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல கைகளில் பெரிய பெரிய பூச்செண்டு களுடன் தலைவர்களும் உறவினர்களும் உள்ளே செல்வதும் வருவதுமாக இருந்தனர்.
 
  கருணாநிதியின் ஸ்பெஷல் பிரசார வேனுக்கு `சாரதி' ரமேஷ். `‘அய்யாவுக்கு நான் 2003-2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்து டிரைவராக இருக்கேன். பிரசாரத்துக்குச் செல்லும்போது கான்வாயில் எவ்வளவு வேகமாகப் போனாலும் எதுவும் சொல்ல மாட்டார். சில சமயம் 140 கிலோமீட்டர் வேகத்துலகூட போகவேண்டியிருக்கும். அப்போதும் ஏதாவது புத்தகம் படிச்சுட்டே வருவார். என்கிட்ட அரசியல் எல்லாம் பேசினதே கிடையாதுங்க” என்றார். வேனின் டயர்களையும் வேனையும் அந்த ஒரு மணி நேரத்தில் 10 முறைக்கும் மேல் சோதனை செய்துகொண்டார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்