தண்ணீர் அகதிகள்!

பாரதி தம்பி

வெயிலின் கொடுமையை இதற்கு முன்னர் இப்படி உணர்ந்தது இல்லை. குளிர் நகரமான பெங்களூரு தகிக்கிறது. கோடை வெப்பத்திலும் இதமான காற்று வீசும் தேனியிலும் கோவையிலும் சூடு தாங்க முடியவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய சமவெளிப் பகுதியிலும், உலகின் நீண்டகால நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் டெல்டா மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நாகப்பட்டினத்தில் ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மின்சார டிரான்ஸ்ஃபார்ம் தானாக வெடித்து எரிகிறது. வட இந்தியாவின் நிலையோ இன்னும் மோசம். தெலங்கானாவில் அனல் காற்றின் தீவிரம் தாங்க முடியாமல் 60-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துவிட்டனர். வெப்பத்தின் தீவிரத்தை உணர்த்த, ஒரு பெண் தன் வீட்டு வாசலில் வெறும் தரையில் ஆம்லேட் போடுகிறார். நிலைமையின் தீவிரத்தை வெகுதீவிரமாக உணர்த்துகிறது மஹாராஷ்டிரா.

மஹாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதி, லத்தூர், ஒஸ்மனாபாத், பீட் ஆகிய மூன்று முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கியது. எப்போதும் வறட்சிப் பிரதேசமான இந்த மாவட்டங்கள், இப்போது தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சியில் இருக்கின்றன. தண்ணீர் லாரி எப்போது வரும் எனத் தெரியாமல் மக்கள் அடுக்கிவைத்திருக்கும் குடங்களின் வரிசை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீள்கிறது; இரவு முழுவதும் விழித்துக் கிடக்கிறார்கள்; நீர் தேங்கிக்கிடக்கும் இடங்களைத் தேடி தாகத்துடன் அலைகிறார்கள். லத்தூர் நகரத்தில் வழக்கமாக 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் நடைபெறும். கடந்த தீபாவளி முதல், இது 20 நாட்களுக்கு ஒரு முறை என்றானது. பிறகு, ஒரு மாதத்துக்கு ஒரு முறை என மாறி, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து லத்தூரின் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் அடியோடு இல்லை.

நிலத்தடி நீர் ஏற்கெனவே வற்றிவிட்டதால், குழாய் தண்ணீருக்கும் வழி இல்லை. இதனால் மக்கள் தாகம்தீர்க்கத் தவித்துப்போனார்கள்; அருகில்  உள்ள ஊர்களுக்கு  இடம்பெயர்ந்தார்கள். இப்படி இந்தக் கோடையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லத்தூரில் இருந்து இடம்பெயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மீதம் இருப்பவர்களின் தாகம் தீர்க்க என்ன செய்வது? பணம் படைத்தோர் லாரிகளில் தண்ணீர் வரவழைத்துப் பயன்படுத்திகொள்வார்கள். ஆனால், பெரும்பான்மை மக்களால் அது முடியாது. இதனால் உள்ளூர் அரசு நிர்வாகம், அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்து விநியோகிக்கத் தொடங்கியது. அப்படி லத்தூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டங்கர்கான் என்ற இடத்தில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். அந்த ஊர் மக்களும் ஆரம்பத்தில் அனுமதித்தனர். ஆனால், லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்