வாட்ஸ்அப் வயசு!

லேடி நந்து, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

காலம் ரொம்ப மாறிப்போச்சு. ஆமாம் ப்ரோ... முன்னாடி எல்லாம் 45 வயசைத் தாண்டினவங்கதான் அட்வைஸ் பண்ணினாங்க. இப்ப அட்வைஸ் பண்றவங்களோட ஆவரேஜ் வயசு ரொம்பக் குறைஞ்சிடுச்சு. எதிர்ல 20 வயசுப் பையனைப் பார்த்துட்டா போதும், 30 வயசு ஆள்கூட `ஏன்டா எந்நேரமும் செல்போனை நோண்டிக்கிட்டு இருக்கே... உருப்படியா ஏதாவது பண்ணுடா’னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுறார்.

ஆனா, இந்தக் காலத்து இளைஞர்களான நாங்க எவ்ளோ யோசிக்கிறோம் தெரியுமா? மூளை எந்நேரமும் புராசஸிங் மோட்லதான் இருக்கு... அப்படி என்ன யோசிப்போம்? மீம்ஸ் போடத்தான். ஆமா... இப்போ நாங்கதான் ட்ரெண்ட் செட்டர்ஸ். நாங்க ட்ரெண்ட் பண்றதைத்தான் அகில உலக மீடியா முதல் அத்தனை செலிபிரிட்டிகளும் ஃபாலோ செய்கிறார்கள். இந்த நேரத்துல ஒரு கவிதையை நிச்சயமா சொல்லியே ஆகணும் `ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் நாங்கள் மூழ்கும் பெர்முடா முக்கோணங்கள்’னு கவிதையைக்கூட நாங்க சோஷியல் மீடியாவை மனசுலவெச்சுத்தான் யோசிப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்