“ஜெயலலிதாவை ஆதரிப்பது சன்னிதானத்தின் கடமை!”

கார்க்கிபவா, படங்கள்: தி.குமரகுருபரன்

ளே மாறிவிட்டார் மதுரை ஆதீனம். ஏற்கெனவே அவர் ஒல்லி; இப்போது இன்னும் உடல் மெலிந்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவை அ.தி.மு.க-வுக்குத் தெரிவிப்பதற்காக சென்னை வந்திருந்த ஆதீனம், ஹோட்டல் ஒன்றில் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவரால் படியேறி வர முடியவில்லை என மரத்தடிக்கு மாறியது பிரஸ்மீட். அது முடிந்ததும் அவரை அறையில் தனியே சந்தித்தோம்.

``என்னாச்சு உடம்புக்கு?'' என்றால், ``சன்னிதானத்துக்கு ஒரு குறையும் இல்லை. வயசாகுது இல்ல?'' எனச் சிரிக்கிறார். ஆனால், வயதான காலத்திலும் அ.தி.மு.க-வுக்காகத் தேர்தல் பிரசாரம் செல்லவும் தயாராகிவிட்டார்.

``ஜெயலலிதா உடனான சந்திப்பில் என்ன நடந்தது?”

`` `இறைவனின் ஆசியும் சன்னிதானத்தின் ஆதரவும் அவங்களுக்கு எப்பவும் இருக்கும்'னு சொன்னேன். அதற்கு நன்றி சொன்னாங்க. எப்பவும் சன்னிதானத்தோட ஆதரவு அவங்களுக்கு வேணும்னு சொன்னாங்க.”

``எவ்வளவு நிமிடங்கள் அந்தச் சந்திப்பு நீடித்தது... யார் யார் உடன் இருந்தார்கள்?”

``அது என்ன... ஒரு 10 நிமிஷம் இருக்கும். என்னுடன் இளைய ஆதீனமும் எங்கள் செயலாளரும் இருந்தாங்க.’'

``இப்போ யாரு இளைய ஆதீனம்?”

``மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சன்னிதானமாக `திருநாவுக்கரசு' என்பவரை இறைவன் தேர்வுசெய்திருக்கிறார். அவருக்கு `ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்ற பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது.”

``ஆதீனத்தோட வாரிசுகளை அடிக்கடி மாத்தினா, உங்க மேல நம்பகத்தன்மை குறையாதா?”

``மக்களுக்கு நம்பகத்தன்மை குறைஞ்சா நமக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. யார் இந்தப் பதவிக்கு வரணும்னு இறைவன் நினைக்கிறானோ, அவர் வருவார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்