இனி எல்லாம் எமோஜி!

கார்க்கிபவா

வற்றைப் பார்த்ததுமே, `ஹாய்... வணக்கம். சூப்பர்' என்பது புரிந்துவிடும். இதுதான் இன்றைய ட்ரெண்டிங் ஸ்டைல்.

`என் ஹார்ட்ல நீதான் இருக்க டார்லிங்...' என்பதில் தொடங்கி, `முடியல... அழுதுருவேன்... எஸ்கேப்' என்பது வரை அனைத்தையும் எமோஜிக்களிலேயே சொல்கிறார்கள் முட்டிக்கு மேல் பேன்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள்போல எல்லா சோஷியல் மீடியாவிலும் மொபைல் போன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி, எப்போது... எங்கே பிறந்தது தெரியுமா?

1998-ம் ஆண்டில் ஜப்பான் `என்டிடி டொகொமோ' என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார்சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடாகா குரிடா என்பவரின் மூலையில் அடித்த ஸ்பார்க்தான் இன்று எல்லா மொபைல் களிலும் மின்னுகிறது. ஜப்பான் கலாசாரத்தில் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அவர்களின் எழுத்துருவே சித்திரங்கள்தான். `இன்று கனமழை பெய்யும்' என, ஜப்பான் நாட்டு ரமணன் சொல்ல மாட்டார்; ஒரு குடை போட்டு அதன் மேல் லிட்டர்கணக்கில் நீர் ஊற்றுவதுபோல் காட்டுவார். அந்த லிட்டரின் அளவைவைத்தே மழையின் அளவை மக்கள் புரிந்துகொள்வார்கள். `இது ரொம்ப ஈஸியா இருக்கே...' என நினைத்த ஷிகேடாகா, பல விஷயங்களுக்குப் படங்களையே பயன்படுத்த நினைத்தார். ஆனால், அன்றைய டெக்னாலஜிப்படி அதிக சைஸில் படங்களை அனுப்புவது சாத்தியம் இல்லை. அதற்காக அவர் யோசித்து உருவாக்கியதுதான் `எமோஜி'.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்