பிட்ஸ் பிரேக்

அப்பாவாகியிருக்கிறார் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். கடந்த இரண்டு ஆண்டுகளாக கெய்லுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தாஷாவுக்கு தெறி பேபி பிறந்திருக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஐபிஎல்-க்கு பிரேக்விட்டு ஜமைக்கா பறந்தார் கெய்ல். ஆனால், `என்னுடைய அழகான மகள் `பிளஷ்'ஐ இந்த உலகுக்கு வரவேற் கிறேன்' என ஸ்டேட்டஸ் தட்டி, மீண்டும் பழைய கதையைக் கிளறியிருக்கிறார் கெய்ல். பிக்பேஷ் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய டி.வி வர்ணனையாளரை `மேட்ச் முடிந்ததும் பார்ட்டிக்குப் போகலாமா... டோன்ட் பிளஷ்(வெட்கம்) பேபி' என கெய்ல் சொன்னது மிகப் பெரிய பிரச்னை ஆனது. அப்படிச் சொன்னதற்காக கெய்ல் பிறகு மன்னிப்பும் கேட்டார். இப்போது மீண்டும் மகளுக்கு `பிளஷ்' என அவர் பெயரிட்டிருப்பதாகச் சொல்லியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்