வாசகர் மெகா தேர்தல் போட்டி 2016 !

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

ச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2016. ஆறு முனைப் போட்டியில் அரசியல் களம் அனலாகக் கொதிக்கிறது. கிட்டத்தட்ட தனித்து நிற்கும் அ.தி.மு.க., தி.மு.க-வோடு கைகோத் திருக்கும் காங்கிரஸ், `நாங்கள்தான் மாற்று’ எனச் சொல்லி தே.மு.தி.க-வுடன் சேர்ந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா... இந்த மூன்று பவர்சென்டர்களின் போட்டியில் தமிழ்நாட்டுக்கே மூச்சுமுட்டுகிறது. கூடவே, சுயபலம் அறியும் முனைப்பில் நிற்கும் பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி... என அதிர்ச்சிதரக்கூடிய கேம் சேஞ்சர்ஸ் தனி!

இந்த ஆறு முனைப் போட்டியில் வாக்குகள் சிதறுமா, யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம், ஆதரவு அலை யாருக்கு, ஆட்சியைப் பிடிக்கப்போகும் வெற்றிக் கூட்டணி / கட்சி எது, முதலமைச்சராக அமரப்போவது யார்... எனக் கணித்துச்சொல்ல, அரசியல் கணிப்புக் கில்லாடிகளான ஆனந்த விகடன் வாசகர்களுக்கு இதோ ஒரு சவால் வாய்ப்பு.

அடுத்தடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூப்பனில் உள்ள கேள்விகளுக்கு, உங்கள் பதில்களைத் தெளிவான கையெழுத்தில் எழுதுங்கள். படிவத்தை முழுவதும் பூர்த்திசெய்த பின்னர், உங்கள் முகவரியைத் தெளிவாக எழுதி கூப்பனைக் கத்தரித்து, ‘வாசகர் மெகா தேர்தல் போட்டி-2016’, ஆனந்த விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

ஆன்லைன் வாசகர்கள் இந்த போட்டியில் பங்கேற்க https://www.vikatan.com/election/contest/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும்.

(அல்லது)

இந்த படத்தை க்ளிக் செய்யவும்

பூர்த்திசெய்யப்பட்ட கூப்பன்களை மேற்கண்ட முகவரியில் நேரடியாகவும் கொண்டுவந்து சேர்க்கலாம்.

6. தேர்தலில் போட்டியிடும் கீழ்க்காணும் பிரபலங்களில் யார் வெற்றிபெறுவார்கள் அல்லது தோல்வி அடைவார்கள் என்பதை சரியான கட்டத்தில் டிக் செய்யவும். வெற்றியோ, தோல்வியோ... அது எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் இருக்கும் என்பதையும் கொடுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களில் ஒன்றை டிக் செய்யவும். (60 மதிப்பெண்கள்)

Click to enlarge


போட்டிக்கான விதிமுறைகள்

** கூப்பன்கள் / ஆன்லைன் படிவங்கள் அனைத்தும் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 14.5.2016. இந்தத் தேதிக்குப் பிறகு வரும் கூப்பன்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

**  இந்தக் கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் விடைகளைப் பூர்த்திசெய்து அனுப்பலாம். வேறு தாளில் எழுதி அனுப்பக் கூடாது.

**  ஒருவரே வெவ்வேறு கணிப்புகள்கொண்ட எத்தனை கூப்பன்களை வேண்டுமானாலும் பூர்த்திசெய்து அனுப்பலாம்.

** கூப்பன்கள் அடித்தல் திருத்தல் இல்லாமல் தெளிவாகப் பூர்த்திசெய்யப்பட்டிருப்பது அவசியம்.

** ஒருவருக்கு மேல் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்களுக்கான பரிசுத்தொகை சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும்.

** ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick