“ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

சார்லஸ், ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

மிழகம் முழுக்க `முடியட்டும்... விடியட்டும்!' என ஸ்டாலின் வாக்கிங் கிளம்பியபோது, அவர்தான் தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் என அழகிரிகூட நினைத்துவிட்டார். ஆனால் நடை முடித்து வந்தபோது, `மீண்டும் நானே முதல்வர்' என கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து பிரசாரத்துக்குக் கிளம்பியது அதிர்ச்சி. இந்தத் தடவையும் தளபதியாகவே கன்டினியூ ஆகிறோம் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பிரசாரத்தில் இறங்கினார் ஸ்டாலின். தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு 27-ம் தேதி வந்தார். காலையிலும் மாலையிலும் பிரசாரம், மதியம் வேட்புமனுத் தாக்கல்... என ஒரே நாளில் செம பிஸியாக இருந்தவரை அப்படியே பின்தொடர்ந்தோம்...

ஸ்டாலின் எப்போது தொகுதிக்கு வந்தாலும் தங்குவதற்காக அயனாவரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி காலனியில் வாடகைக்கு வீடு தயார். காலை 8 மணிக்கே கொளத்தூர் வந்துவிட்டார் ஸ்டாலின். சிவப்புச்சட்டையும் பீஜ் பேன்ட்டும்தான் காலை காஸ்ட்யூம். கொஞ்ச தூரம் நடை, பிறகு ஜீப் என உற்சாகமாக இருந்தது பிரசாரம்.

பெரம்பூரில் ஒரு சர்ச் கேம்பஸுக்குள் நுழைந்தார். ஸ்டாலின் வருவதைப் பார்த்ததும் திமுதிமுவெனக் கூட்டம் சேர, அவர்களோடு சில நிமிடங்கள் ``சிறுபான்மைச் சமூகத்துக்காகத் தொடர்ந்து பாடுபடுகிற கட்சி தி.மு.க-தான்'' என்றபடி, கலகலப்பாகப் பேசுகிறார், கைகொடுக்கிறார். செல்ஃபிகளுக்கு போஸ் தருகிறார்.

`மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை ராகுகாலம் என்பதால், மதியம் 2 மணிக்குமேல்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவார்' எனத் தொண்டர்கள் பேசிக்கொண்டனர். அதேபோல மதியம் 2 மணிக்கு வந்தார் ஸ்டாலின். இப்போது காஸ்ட்யூமில் கம்ப்ளீட் சேஞ்ச். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்