வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

facebook.com/Thamira Aathi: காலையில் ஆட்டோ கத்திக்கொண்டே போகிறது... `உழைப்பாளிகளின் சின்னம் கை! விவசாயிகளின் சின்னம் கை! பாட்டாளிகளின் சின்னம் கை!’ - 30 வருடங்களுக்கு முன்னால் கேட்ட அதே வசனங்கள்.

இந்த டயலாக்கையாவது `இன்ஜினீயர்களின் சின்னம் கை! டாக்டர்களின் சின்னம் கை! ஐடி-க்காரர்களின் சின்னம் கை...’ என  ஒரு சேஞ்சுக்கு இப்படி மாத்தி எழுதித்தரக் கூடாதா ஐயா!

twitter.com/manipmp: `கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பது ஓட்டு போடுவதற்காகவே சொல்லப் பட்டிருக்கலாம்!

twitter.com/amuduarattai:
பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Veedhisattva: பிரமிப்புகளிடம் இருக்கும் பிரச்னையே, அவை ஒரு கட்டத்தில் பழகிப்போய் விடுவதுதான்!

twitter.com/kumarfaculty: உலகத்திலேயே மிகச் சுவையான உணவு, குழந்தைகளுக்காகப் பிசையப்பட்டதாகத்தான் இருக்கும்!
twitter.com/iKaruppiah:
ஒரு சிட்டிகை வாசனைப்பொருள் சேர்த்தாற்போல் உள்ளது, உரையாடலில் நீ உபயோகிக்கும் ‘ம்ம்’!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்