"காலா கலூட்டா!”

அதிஷா

`ராமன்ராகவ் 2.0’ படத்துக்காக 20 நாட்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பு. ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் காய்ச்சலில் மயங்கி விழுந்துவிட்டார் நவாஸுதீன். அந்தேரியின் பிரபலமான மருத்துவமனையில் சேர்த்தனர். மருந்து கொடுத்து நவாஸுதீனைத் தூங்க வைத்திருந்தனர். அருகில் மனைவி உறங்கிக்கொண்டிருந்தார். அர்த்த ராத்திரியில் திடீரென ஒரு குரல். காட்டுத்தனமாகக் கேட்கிறது. அதிர்ந்து போய் விழித்துப்பார்க்க, நவாஸுதீன் ஏதேதோ கத்திக்கொண்டிருக்கிறார்; பிதற்றுகிறார். மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். எல்லாம் நார்மல்.

என்னவென்று புரியாமல் நவாஸுதீனின் நெருங்கிய தோழனும் `ராமன்ராகவ் 2.0' படத்தின் இயக்குநரு மான அனுராக் காஷ்யபை அழைக் கிறார்கள். வந்து கவனித்த சில நிமிடங்களில் அனுராக் காஷ்யப்புக்குப் புரிந்துவிடுகிறது. அவர் முகத்தில் புன்னகை.  நவாஸுதீன் அந்த இரவில் உளறிக்கொண்டிருந்தது... சைக்கோ கொலைகாரனான `ராமன்ராகவ்’ பாத்திரம் பேசவேண்டிய வசனங்கள். இந்த அர்ப்பணிப்பு, உழைப்பு இரண்டும் தான் நவாஸுதீன் சித்திக்கியின் அடையாளங்கள்.

 `ராமன்ராகவ் 2.0' படத்தின் ட்ரெய்லர், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 60-களில் மும்பையைக் கதறவிட்ட ராமன்ராகவ் என்கிற கொலைகாரனின் கதை. ஹீரோ, நம்ம ஆளுதான்!

`பாலிவுட்டில் நான் ஒரு காலா கலூட்டா' என்கிறார் நவாஸுதீன் சித்திக்கி. அதற்கு `கருமாண்டி' அல்லது கறுப்பு நிற அழகற்ற ஆள் என அர்த்தம். சிக்ஸ்பேக் சிங்கங்களும் செக்கச்செவேல் ஆணழகன்களும் நிறைந்த இண்டஸ்ட்ரி. அதில் எந்த நடிகனும் திடீரென எங்கு இருந்தோ கிளம்பிவந்து அவ்வளவு எளிதில் ஸ்டாராக ஆகிவிட முடியாது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசய வைபவம் அது. 60-களில் தர்மேந்திரா, 70-களில் மிதுன் சக்கரவர்த்தி, 80-களில் ஜாக்கி ஷெராப் என எப்போதாவதுதான் அந்த மேஜிக் நடக்கும். அப்படி நடந்த அற்புதம்தான் நவாஸுதீன். ஒல்லிப்பிச்சான் உடம்பும் ஒட்டிப்போன கன்னங்களும் கறுத்த முகமுமாக நவாஸுதீன் பாலிவுட்டில் நுழைந்ததும், எளியவர்கள் திறக்கமுடியாத கதவுகளை உடைத்ததும், ஒரு தனிமனிதனின் 12 ஆண்டு காலப் போராட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்