காக்டெய்ல் தீம் பார்க்!

கார்க்கிபவா

ம்மர் விடுமுறைக்கு விருந்தினர் வீடுகளுக்கு படை எடுக்கும் வாண்டுகளின் டாப் சாய்ஸாக இருந்தவை தீம் பார்க்குகள்தான். இன்று அந்த இடம் ஷாப்பிங் மால்களுக்குப் போய்விட்டது. ஜில்ஜில் ஏ.சி., ஃபுட் கோர்ட், சினிமா தியேட்டர், கேம் ஸோன் என மால்களின் யார்க்கரில் தீம் பார்க்குகள் க்ளீன் போல்டு ஆகிவிட்டன. ஆனால், வியட்நாமில் இருக்கும் பாழடைந்த, செயல்படாத தீம் பார்க் ஒன்றைத் தேடித்தேடி படையெடுக்கிறார்கள் அட்வென்ச்சர் பிரியர்கள்.

2004-ம் ஆண்டில் வியட்நாம்வாசிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது ‘Ho Thuy Tien’, என்ற மிகப் பெரிய வாட்டர் தீம் பார்க். சில காரணங்களால் முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்னரே திறக்கப்பட்டு, சில மாதங்களிலேயே அது மூடப்பட்டது. அன்றிலிருந்து இந்த விஸ்தாரமான இடத்தை யாரும் பராமரிக்கவில்லை. பெயருக்குக்கூட எந்த செக்யூரிட்டியும் இன்றி சிதிலமடைய ஆரம்பித்தது Ho Thuy Tien.

12 வருடங்கள் கழித்து, சமீபத்தில் க்ரிஸ் ஸ்டாரிங் என்கிற புகைப்படக்காரர் இந்த இடத்துக்குச் சென்று படங்கள் எடுத்திருக்கிறார். “இயற்கையிடம் இருந்து நாம் நிறைய இடங்களைத் திருடியிருக்கிறோம். ஆனால், நம்மிடம் இருந்து இயற்கை மீட்டெடுக்கும் இடங்களைத் தேடுவதுதான் என் வேலை. அந்த மாதிரி இடங்கள் கொடுக்கும் த்ரில் எனக்குப் பிடிக்கும். வியட்நாமின் இந்த தீம் பார்க், அந்த வரிசையில் டாப்” என்கிறார் ஸ்டாரிங்.

ஒரு பெரிய ஏரி சைஸில் இருக்கும் இந்த தீம் பார்க்கை, சைக்கிளில் சுற்றிப் பார்க்கலாம் என டிப்ஸ் தருகிறார் ஸ்டாரிங். “காட்டு நாய்கள் இருந்தால்தான் பிரச்னை. இங்கே முதலைகளும் பாம்புகளும் மட்டும்தான். நாய்கள் இல்லை” என பீதியையும் கிளப்புகிறார். அட்வென்ச்சர் ஆர்வலர்கள் கும்பல் கும்பலாக இங்கே சென்று வருவதைக் கண்டும் காணாமலும் இருக்கிறது வியட்நாம் அரசு. வியட்நாமின் டூரிஸ்ட் கைடில் இந்த இடம் இல்லை. இது ஏன் மூடப்பட்டது... ஏன் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவில்லை.

“நான் பைக்கில் சென்றேன். யாரும் என்னைத் தடுக்கவில்லை. தடுப்பதற்குக்கூட யாரும் அங்கு இல்லை. ஃப்ரைட் ஐஸ் க்ரீம்போல இயற்கையும் செயற்கையும் கலந்த கலக்கலான காக்டெய்ல் இடம். வியட்நாம் போனா மிஸ் பண்ணிடாதீங்க” என்கிறார் ஸ்டாரிங்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்