ஹாஜியின் சிரிப்பில்...

கார்க்கிபவா

`சிலரிடம் பணம் நிறைய இருக்கும்; சிலரிடம் இருக்காது. பணம் இருப்பவர்கள், இல்லாதவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்' - பாபு ஹாஜி அடிக்கடி சொல்லும் வாசகம் இது.
 
தனது 20 ஏக்கர் நிலத்தை பலருக்குத் தந்திருக்கிறார் ஹாஜி. தன்னிடம் வேலைசெய்த மலைவாழ் மக்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் தந்திருக்கிறார். வயதானவர்களுக்காக, 75 லட்சம் ரூபாய் செலவுசெய்து டிஸ்பென்ஸரி வைத்துக் கொடுத்திருக்கிறார். தனது வாழ்நாளில் இதுவரை மூன்று கோடி ரூபாய்க்குமேல் பிறருக்கு உதவிகள் செய்திருக்கிறார். யார் இந்த பாபு ஹாஜி?

 ஹாஜியை, இந்தத் தேர்தல் சீஸனுக்கு முன்னர் வரை கேரளா மலப்புரம்வாசிகளைத் தவிர பிறருக்குத் தெரியாது. தேர்தல் பணிகளுக்காக மலப்புரம் சென்ற சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளின், கண்ணில் வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள் தென்பட்டன. வீடுகளின் அழகு அவற்றைப் பற்றி விசாரிக்கவைத்தது. வசதியானவர்களின் ஹாலிடே ஸ்பாட்டாக இருக்கலாம் என நினைத்தவர்களுக்கு, அது வயதானவர்களுக்கான இல்லம் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தனது சேமிப்பில் இருந்து ஒரு கோடியை செலவுசெய்து ஹாஜி அதைக் கட்டுகிறார் என்பது இன்னும் பேரதிர்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்