“த்ரிஷாகிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, ச.ஆனந்தப்பிரியா, படம்: பா.காளிமுத்து

``சிம்பிளா கேட்டா சிறப்பா பதில் சொல்லிடுவேன்'' - சின்னதாகச் சிரிக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி.

``கேள்விகளை அள்ளிப் போடுங்க... சமைச்சுடலாம். ஸாரி... ஜமாய்ச்சுடலாம்” என்று ஃபுல் எனர்ஜியுடன் தயாரானார் செஃப் தாமு.

``ஜி.கே-ல நான் கொஞ்சம் இல்லை, ரொம்ப வீக் ஜி” - இது காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா.

``மியூஸிக் பற்றிக் கேட்டீங்கன்னா, 100 மார்க் ஸ்கோர் பண்ணிடுவேன், வேற ஏதாவதுனா நான் எஸ்கேப்தான். பார்த்து கேளுங்க பாஸ்!'' - பரபரக்கிறார் பாடகி ஹரிணி.

``தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு விளம்பரங்களிலும் நடித்த பாட்டி நடிகையின் பெயர் என்ன?''

விடை: கஸ்தூரி.

மதன் கார்க்கி: ``சமீபத்துல யாரோ ஒருத்தர் இதைப் பற்றிப் பேசிட்டு இருந்தாங்க. `ஒரே ஆள் கோக், பெப்சி போன்ற ரெண்டு பிராண்டுலயும் விளம்பரம் பண்ணாங்கன்னா எப்படி இருக்கும்?'னு நானே சில சமயம் யோசிச்சு இருக்கேன். அப்படி நடந்த விஷயம்தான் இந்த விளம்பரம். அந்தப் பாட்டி பேரு `க'-ல ஆரம்பிக்கும். காஞ்சனா பாட்டியா அல்லது கஸ்தூரி பாட்டியானு ஞாபகம் இல்லையே.''

செஃப் தாமு: ``ஓவர் இனிப்பும் நிறையக் கசப்பும் எப்படி சிலருக்கு ஆகாதோ... அப்படித்தான் எனக்கும் இந்த பாலிட்டிக்ஸே ஆகாது. இருந்தாலும் சிக்கிக்கிட்டேனே, பதில் சொல்லிடுறேன். அந்தப் பாட்டி பேர் கஸ்தூரி. அவங்களை நடிக்கச் சொல்லி கேட்டதால, நடிச்சிருக்காங்க. இதுல ஒண்ணும் தப்பு இல்லையே!”

பூர்ணிமா: ``அந்த விளம்பரத்தை நான் பார்த்தேனே. அந்தப் பாட்டி மேல நான் தப்பு சொல்ல மாட்டேன். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை வைச்சு விளம்பரம் எடுக்கிறவங்கதான் சரியா விசாரிச்சு இருக்கணும். இது பிரச்னை ஆனதும், அந்தப் பாட்டி மேல குத்தம் சொன்னா எப்படி? பட், அந்தப் பாட்டி ரொம்ப க்யூட்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்