இன்பாக்ஸ்

  ராகுல் டிராவிட்தான் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஜூனியர் கிரிக்கெட் டீமின் பயிற்சியாளர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய ஏ மற்றும் ஜூனியர் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் டிராவிட். இந்த ஓர் ஆண்டில் மட்டும் அவருக்கு 2.62 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டி.வி வர்ணனையாளரான சுனில் கவாஸ்கருக்கு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு மட்டும் 90 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியிருக்கிறது பி.சி.சி.ஐ. காஸ்ட்லி கேம்!

  ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு, பெல்ஜியம் போலீஸ் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிக்கைதான் கடந்த வார ஆன்லைன் வைரல். ஃபேஸ்புக்கில் பல ஆண்டுகளாக இருந்த `லைக்’ பட்டனோடு சமீபத்தில் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக புதிய பட்டன்களையும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், `இந்த பட்டன்களைப் பயன்படுத்த வேண்டாம்' என, தன் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது பெல்ஜியம் போலீஸ். `ஃபேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளைவைத்து நம்மைப் பற்றி அறிந்துகொள்ளும் ஃபேஸ்புக் நிறுவனம், நம்மை வகைப்படுத்திக்கொண்டு நமக்கு ஏற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் சம்பாதிக்கிறது. மனநிலையை அறிந்து மார்க்கெட்டிங் செய்வதை இது மேலும் எளிதாக்குகிறது. எனவே, உங்கள் தனி உரிமையைப் பாதுகாக்க விரும்பினால், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்’ என எச்சரித்துள்ளது. புத்திசாலி போலீஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்