கலைடாஸ்கோப் - 41

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

மருந்து அட்டைகள்

குழந்தைகள் மிட்டாய் வாங்குவதுபோல, சின்னச்சின்ன உடல் உபாதைகளுக்குக்கூட மாத்திரை வாங்கிச் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். ஜலதோஷம் போன்ற சாதாரண விஷயங்களுக்குக்கூட, பிரபலங்களின் கிராஃபிக்ஸில் சிவந்த மூக்குகளை விளம்பரங்களில் காட்டி வியாபாரம் செய்கிறார்கள். சுக்குக் கஷாயம் குடிக்கும் பரம்பரையில் வந்த நாம், விளம்பரங்களை நம்பி ஏமாந்து உடலை வேதியல் பொருட்களின் குப்பைக்கூடையாக மாற்றுகிறோம். இந்தியச் சந்தைகளில் இருக்கும் தேவையற்ற மாத்திரை மற்றும் மருந்துகளுக்கு மத்திய அரசு  சமீபத்தில் தடை விதித்தபோது, அதிர்ச்சியில் சிலருக்கு தலைவலி வந்து அதற்கும் மாத்திரையைத் தேடினார்கள்.

இயற்கையின் மிகப் பெரிய கொடையான உடலுக்கு எதிராக, இந்த சிந்தெட்டிக் வேதியல் யுத்தங்களை, தன் கலையில் பதிவுசெய்கிறார் ஓவியர் சாரா. விழிப்புஉணர்வோ, பிரசாரமோ செய்வதுபோல, அவர் எதையும் வரையவில்லை. அழகான பறவைகளின் போஸ்டர் தொடர்பான  கலர் ஓவியங்களை வரைகிறார். அதை எதில் வரைகிறார் என்பதில்தான் கலையின் அரசியல் இருக்கிறது. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் பல்வேறு மருந்து அட்டைகளைப் பிரித்து, அதன் உள்பக்கத்தில்தான் இந்தப் பறவை ஓவியங்களை வரைகிறார்.

இதுவரை 120 -க்கும் மேலான மருந்து அட்டை ஓவியங்களை வரைந்து கண்காட்சியாக வைத்திருக்கும் சாரா, `மருந்து அட்டைகளின் எதிர்ப்பக்கத்தில் பறவைகளை வரைவது இயற்கைக்கும் செயற்கையான மருந்துகளுக்கும் இடையிலான முரண்பட்ட தன்மையைக் குறியீடாக உணர்த்தத்தான். பறவைகள் என்பது, இயற்கையில் சுதந்திரமான உயிர்கள். அவை மண்ணையும் விண்ணையும் தன் சின்னஞ்சிறிய சிறகுகளால் இணைத்து வாழ்கின்றன' என தன் இணையப் பக்கத்தில் சொல்கிறார்.

சில மருந்துகள், உயிர்களை மண்ணில் இருந்து விண்ணுக்கு பறவைகளைப்போல அனுப்பிவிடுகின்றன என, கோக்குமாக்காகக் குறியீடு தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்