இந்தியாதான் கெத்து!

பு.விவேக் ஆனந்த்

`கபடியில் நாங்கதான் கெத்து' என உலகுக்கு மீண்டும் உரக்கச் சொல்லியிருக்கிறது இந்தியா. 

``இந்த முறையும் இந்தியாதான் உலகக்கோப்பையை வெல்லும்'' என, தொடர் ஆரம்பிக்கும் முன்னரே சொன்னார் கேப்டன் அனுப்குமார். ஆனால், லீக் தொடரின் முதல் போட்டியிலேயே கொரியா இழுத்துப்பிடிக்க, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது இந்தியா.

`இந்த முறை கஷ்டம்தான், வீரர்களிடம் பழைய சுரத்து இல்லை. பார்த்துக்கிட்டே இருங்க இவங்க தேற மாட்டாங்க' என விமர்சனங்கள் எழ, அடுத்த போட்டியில் இருந்து எதிர் அணியை எழவேவிடாமல் புள்ளிகளை வாரிக் குவித்தது இந்தியா. ஆஸ்திரேலியா, வங்கதேசம், அர்ஜென்டினா, இங்கிலாந்து என மோதிய எதிர் அணிகள் அத்தனையும் சுமார் 30-60 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. எழுந்தது இந்தியா.

அரை இறுதியில் இந்தியா - ஈரான் அணிகள் மோதும் என்ற நிலை இருந்தபோது, லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி யாருமே எதிர்பாராதவண்ணம் புது என்ட்ரி கொடுத்தது தாய்லாந்து. உலகக்கோப்பையின் லீக் சுற்றில் ஒரு போட்டியில்கூடத் தோற்காத ஒரே அணி என வலிமையுடன் வளையவந்த கொரியாவை, அரை இறுதியில் கடுமையாகப் போராடி வீழ்த்தியது ஈரான். இன்னொரு பக்கம் தாய்லாந்தை 53 புள்ளிகள் வித்தியாசத்தில் வெறித்தனமாக விளையாடி வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

சர்வதேச கபடி சம்மேளனம், இதுவரை அதிகாரபூர்வமாக மூன்றே உலகக்கோப்பை போட்டிகளைத்தான் நடத்தியிருக்கிறது. அதில் 2003, 2007-ம் ஆண்டுகள் நடந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி களிலும் இந்தியாவும் ஈரானும்தான் மோதின.

`` `ஈரான் ஏன் இந்தியாவிடம் மட்டும் தோற்றுவிடுகிறது?' என எப்போதும் யோசிப்பேன். இந்தியா வந்த பிறகு அதற்கான விடை கண்டுபிடித்துவிட்டேன். கபடியில் விவேகத்தைக் காட்டிலும் அக்ரசிவ் மனப்பான்மை முக்கியம் என்பதை இந்தியாவில் ப்ரோ கபடியில் விளையாடியபோது கற்றுக்கொண்டேன். வரலாறு மாறும். ஃபைனலில் இந்தியாவை ஜெயித்துக்காட்டுவோம்'' என இறுதிப்போட்டிக்கு முன்னதாக பேட்டி கொடுத்தார் ஈரான் கேப்டன் மெரஜ் ஷேய்க். ஆனால் இந்தியாவின் அனுப்குமாரோ ``அமைதியாக இருக்கிறோம், நிச்சயம் ஜெயிப்போம்'' என சிம்பிளாகச் சொல்லியிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்