ஜென் Z - “கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கணும்!”

ஆ.ஐஸ்வர்ய லட்சுமி, படம்: பா.பிரபாகரன்

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயியின் மகள், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வாங்கித் தந்திருக்கிறார். சமீபத்தில் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் 200 சதுரங்க வீரர்கள் போட்டியிட்ட உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்  வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார் நந்திதா. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு கடைசி ஆண்டு மாணவி.

``ஆரம்பத்துல எனக்கு கோச்னு யாரும் இல்லை. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ்கூட விளையாடி அவங்க சொல்லித்தந்ததைக் கத்துக்கிட்டேன். செஸ்தான் என் எதிர்காலம்னு முடிவானதும் முறையா பயிற்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். பிறகு அண்டர் 11-ல தேசிய அளவுல வெண்கலம் ஜெயிச்சேன். 2008-ம் ஆண்டு  தேசிய செஸ் சாம்பியன்ஷிப்ல வெள்ளி எனத் தொடர் வெற்றிகள் என்னை என்கரேஜ் பண்ணிக்க உதவின” நாஸ்டால்ஜியாவில் மகிழ்கிறார் நந்திதா.

``படிப்பு, செஸ்.. எப்படி பேலன்ஸ் செய்றீங்க?”

``ஆரம்பத்துல சிரமமா இருந்தது. அப்புறம் பழகிருச்சு. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்தான் அண்ணா யுனிவர்சிட்டியில் ஸீட் கிடைச்சது. நம் இலக்கு என்ன என்பதை வீட்டுக்கும் நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் சரியா புரியவெச்சுட்டா, அவங்களே நமக்குப் பலமா மாறிடுவாங்க. அதான் என் சீக்ரெட்.’’

``அடுத்த கட்டத் திட்டங்கள்..?”

  ``அடுத்து என்ன... செஸ்தான். செஸ்ங்கிறது கடல்போல. இப்போ நான் அதன் கரையில் நிற்கிறேன். பெண்கள் பிரிவில் நான்தான் international master. சீனியர் பெண்கள் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கணும். எதிர்காலத்தில், உலக அளவில் சிறந்த பெண் செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வதே என் லட்சியம்!’’
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்